தவிப்பு

276 41 50
                                    

கண் திறக்கும்  வேளையில் 
உன் காதலை கூறி
விடியலை அழகாக மாற்றி 

காதலோடு ஒரு பார்வை
ஆசையோடு  ஒரு அணைப்பு  ....
காதலை காவியங்களில் மட்டும்
படித்து தெரிந்து கொண்ட நான்
இன்று உன் ஒற்றை
அணைப்பில் உணர்ந்தேனடா

நீ பேசும் வார்த்தைகளை
என் செவி  ஏற்காமல் 
சிலையென நிற்க 
தீடீரென உன் விலகல்
புரியாமல் நான் விழிக்க 
அவ்விடம் விட்டு அகன்றாய்

ஆசையாய்   அழைத்திட
உதடு துடித்த நேரம் என்
செவிக்குள்  ஒரு சத்தம் 

வைத்த அலாரம் நினைவு
படுத்தியது விடியலை
விழி திறக்காமல்  இருந்திருந்தால்
உன் பெயரையாவது  ஆசைதீர
உச்சரித்து  இருப்பேன்
கனவில் கூட தவிக்க  விடுகிறாய்  கண்ணா

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now