உன் விழி எனை விடாது நோக்குகையில் விழி தாழ்த்தாமல் உன் விழி சந்திக்க ஆசை...
உன் விழி பார்த்து என் காதல் சொல்லிவிட ஆசை...
உன் விழிகளுக்குள் என் முகம் பார்த்திட ஆசை...
உன் இமைகளின் நடுவில் பாதுகாப்பாய் இருந்திட ஆசை...
நீ படிக்கும் முதல் காதல் கடிதம் என் கவிதைகளாக இருந்திட ஆசை...
கொட்டும் மழைத்துளியில் உன் விழி பார்த்து பேசிட ஆசை..
என்னையும் அறியாமல் உன் விழிகளுக்குள் தொலைந்திட ஆசை
உன் விழியோடு நானும்
என் விழியோடு நீயும்
மறந்து மெய் சிலிர்த்து நொடி பொழுது ரசித்திட ஆசை...காதலோடு கரைகிறேன்
கவிதையோடு வாழ்கிறேன்
உனக்காக காத்திருக்கிறேன்
உன் விழியால் காதல் உணர்த்தி என் கரம் கோர்த்திட வா !!!
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....