💕😘அப்பா 😘💕

77 14 16
                                    

இவ்வுலகில் நான் பார்த்து வியந்த விந்தை என் தந்தையே...
மழை நீர் நனைக்க கூடாதென தன் முந்தானை இழுத்து தாய் என் தலையில் போடுகையில்....
எனை வாங்கி மார்பில் போட்டு இடுப்பளவு குனிந்து கொண்டு தன்னையே குடையாய் மாற்றி கொண்டவர்...
இன்று வரை எனக்கு வலிக்காமல் சிற்பமென செதுக்கும் உளி நீ..
உழைத்து களைத்து வீடு திரும்புகையில் என் உதட்டோரம் மலரும் சிரிப்பில் தன் சோர்வை மறந்து ரசிப்பவர்...
கஷ்டங்கள் பல கடந்து வந்த போதிலும் பிள்ளையின் இஷ்டத்தை ஒன்றும் குறைவைக்காமல் காத்தவர்..
தினமும் சண்டையிடுகிறேன் தேவையில்லாமல் ஏன் கோபப்படுகிறார்கள் என்று இரண்டு சொட்டு கண்ணீரும் சேர்த்து விடுகிறேன்....
கோபம் மறந்து என்னை சமாதான செய்வதில் இறங்கிவிடுகிறார் தன் கோபத்தில் நியாயம் இருக்கும் போதிலும்...
தனக்கென்று எதையும் சேர்க்காமல் என் பிள்ளைகளுக்கு என்று சோர்ந்த போதிலும் ஓயாமல் உழைக்கிறார் இன்றளவிலும்...
வாழ்க்கையை அனுபவமுறையில் அறிவுக்கூர்மையுடன் கையாள வேண்டும் என்று அழகாய் அறிவுறுத்தபவர்...
என் வாழ்க்கை மேம்படுத்த வந்தவரே உன் மனதில் கவலை நீங்கி என்றும் நலமுடன் என்றென்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் அப்பா...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.... 😍😍😘😘😘

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now