நேசம் தேடும் நெஞ்சம்

374 28 64
                                    

நேசிக்குறேன்  உன்னை.....

முகமறியால் முகவரி தெரியாமல்.. ...

என் மனதை களவாடி
சென்றவனே....

உன் கைகோர்த்து பயணித்திட 
ஆசை எழுகிறது என்னவனே......

எழுதும் எண்ணங்களின் வார்த்தை
அனைத்தும் என்னவனுக்காக
கவியாய் சேர்கிறது....

முகமறியா உன்னைப்பற்றி
முப்பொழுதும் நினைக்கிறேன்....
என் கற்பனை காதலில்...

ஊரடங்கும் நேரத்திலும் உன்னை
பற்றிய எண்ணம் என்னை
விழித்தெழ செய்கிறது....

உந்தன் கைவிரல் பிடித்திட..
நேரம் காலம் அறியாமல் துயில்
கொள்கிறேன்....

என் கனவில் மட்டும் தானே உன்னை காணமுடிகிறது......

சுற்றி உள்ளவர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன்...

கற்பனையில் உன்னுடன் பேசியே
நாட்கள் கழிகிறதே....

காரணம் நான் அறிந்ததே...
ஆனால் பிறரிடம் எப்படி சொல்வேன்...

ஆற்றில் ஓடும் நீராக உன்னை பற்றிய எண்ணங்கள் அனைத்தும் எங்கும்
நிற்காமல் ஓடுகிறது...

வழியெங்கும் உன்னையே
நினைத்து....

கற்பனையில் ஒரு பெயர் சூட்டி
அழைக்கிறேன்....

கள்வனை காண்கையில் சொல்லி
மகிழ்ந்திட...

என்னவனை தேடி தொடர்கதையாய்
வாழ்க்கை பயணம் நீள்கிறது...

பயணத்தின் முடிவில் தான் உன்னை
காண இயலுமோ........

இன்று சுவாசமின்றி உன் நேசம்
தேடுகிறேன்...

நான் வாங்கும் மூச்சு கற்று..
உன் மூச்சோடு கலந்திடுமா...
இல்லை மூர்ச்சை ஆகிடுமா...

அறியவில்லை இந்த பேதை உள்ளம்...
ஆனால் அலைபாய்கிறது உன்னிடம் ...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now