தென்றலோடு உன் நினைவு

67 15 27
                                    

சுயநலம் இல்லா துணைவி வேண்டுமென்கிறாய் நானோ நீ  எனக்கு மட்டும் தான் என்ற சுயநலத்தோடு வருகிறேன்...

ஆசை ஏதும் மறைக்காமல் கூற வேண்டும் என்கிறாய் உள்ளத்தின் ஆசை அனைத்தும் உண்மையோடு சொல்வேன் என்கிறேன்....

என் இதய நூலகத்தில் நீ மட்டுமே என்  காதல் புத்தகம் படித்திட ஆசை... எடுக்க எடுக்க ஏடு குறையாமல் வரும் என் காதல் ஆசை அனைத்தும் நீ காதலோடு நோக்கிட....

ஒரு சொல் கொண்டு எனக்குள் ஆயிரமாயிரம் ஆசைகள் தந்தவனே என் மார்போடு நீ சாய்ந்து என் இதய ஓசை கேட்டிட ஏங்குகிறேனே...

கற்பனையில் என்னுள் வாழ்பவனே கண்ணெதிரே தோன்றும் நேரம் இன்று உனக்காக சொல்லும் கவியெல்லாம் வர மறுத்திடுமோ.....

கனவில் கூட ஊடல் மட்டுமே நமக்குள்  என்று என்னை காண வருவாயென எதிர்நோக்குகிறேன்  நெருங்கி வந்த பின் வார்த்தை வருமா அறியவில்லையே...

மழைத்தென்றலில் உன் நினைவு என்னை தழுவி செல்கிறது இருவரையும் காணவில்லை ஆனால் மனதில் சுகமாய் சிலிர்க்கிறது தென்றலோடு உன் நினைவும்...

எத்துணை முறை எழுதினாலும் அலுக்காமல் ஆசையோடு செதுக்குகிறேன் உன்னை பற்றி கவிதை எழுதும் போது மட்டும்...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now