என்னவள் அவளின் அழகில் எனை எளிதில் கொள்ளை கொண்டாள்..
அவளை சுற்றி குத்தும் முட்கள் இருக்கும் போதும் மொட்டு விட்டு சிரிக்கிறாள்...
ஆசையோடு நீர் ஊற்ற அமைதியாய் பூக்கிறாள்...
மலர்ந்த அவள் முகத்தை கண்டு முட்களுக்கு நடுவில் சிக்கிவிட்டாள் என எண்ணி பறிக்க நினைக்க..
பக்கத்தில் வந்ததும் உணர்த்துகிறாள் அவளது சிரிப்பின் அர்த்தம்...
எண்ணிய எண்ணம் பறந்து போகிறது அவளிடத்தில் மட்டும்...
அமைதியாய் ரசிக்கிறேன் அவள் அழகை இவ்வுலகை மறந்து...
பறிக்க வந்த கரங்கள் நிதமும் அவளிடத்தில் மட்டும் தோல்வியோடு திரும்புகிறது ஆனந்தமாய்..
அவளே எனை வென்ற என் வீட்டின் அழகிய வெள்ளை ரோஜா...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....