என் தேவதைகள்

79 17 18
                                    

பூமிக்கு வந்த நாள் முதல் அவர்களுக்கு தாயாகி..
பொக்கை வாய் தெரிய அழுகையில் அன்று பெரிதாய் சிரித்தேன்  ....
இன்று முத்துப்பல் தெரிய சிரிக்கிறாள் கண்ணீர் மறைத்து நான் கலங்குவேன் என்று.. 
இன்று அவள் கண்களின் கனவுகளை நான் சுமக்க...
என்றும் அவள் வலிகள் மறந்து சிரிக்க பாரம் எல்லாம் நான் ஏற்க...
அன்று முதன் முதலாய் அக்கா என்று உதிர்த்த நேரம் சிரித்தேனா அறியவில்லை...
இன்று அக்கா என்கையில் திரும்பி பார்க்க தவிக்கிறேன்...
தாவி அணைத்து கைக்குள்ளே வைத்து கொள்வேனோ என்று...
அன்று முத்தம் கொடுத்த போது எச்சில் என்று துடைத்தெறிந்தவள்...
இன்று அழுகையோடு கட்டி இறுக்கி கொண்டே நீ போ என்கிறாள்..
அதே முத்தம் எச்சில் தெறிக்க கொடுக்கிறேன் அக்கா என்று தேம்புகிறாள்...
இது தான் பெண்மை என்று உணரும் முன்னே என்னை தாயாக்கிய தங்கைமார்கள்..
என் சிறுநேர கலக்கத்தில் தாயாய் அரவணைத்தவள்...
தவமே தவமாய் என் வாழ்வின் வரத்தின் விடியலாய் வந்த தேவதைகள்...
இருவரின் கண்ணீர் கண்டால் உயிர் துடிப்பே அடங்கி விடுகிறது..
மீண்டும் உயிர் பெறுகிறது என் கரம் தானே அவர்கள் வேண்டும் மருந்து..
கை வளைவுக்குள் வைத்தே வாழவைத்து இன்று பரந்து விரிந்த உலகை பார்க்க சிறகடிக்கயில் மொத்தமாய் படபடக்கிறது அவர்களின் சிறகுக்கு முன்னாள் என் இதயம்...  வாழ்வின் எவர் இன்றியும் வாழ்ந்திடுவேன் தாயான தங்கைகள் தாயாக்கிய தங்கைகள் இன்றி நிச்சயமாக முடியாதே இன்று என் வாழ்வு  மலர்வதே என் செல்வங்களுக்காக மட்டுமே.. ...
என்றும் உங்கள் கண்ணில் தெரியும்  ஆசையை அழகாக மிளிர வைத்து அதற்கு  ஒளியேற்றுவதே என் ஆசை....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now