என் நண்பனுக்காக

76 18 49
                                    

கவலையில் அழும் போது
சிரிக்க வைக்க...

கஷ்டத்தை கடந்து செல்ல ஆறுதலாய் இருந்திட இன்பத்தை ரெட்டிப்பாக்க...

கண்ணீர் வருகையில் கரம்
கொண்டு துடைத்திட...

துவண்டு விழுகையில் கைபிடித்து
ஆறுதல் சொல்ல தவறை சுட்டிக்காட்டிட ...

தடுமாறுகையில் தாங்கிப்பிடிக்க....

தடம் மாறுகையில் தலையில் கொட்டி
நல்வழி காட்ட...

மனம் வாடுகையில் அன்பாய்
அணைக்க...

கேலி பேசுகையில்
வலிக்காமல் அடிக்க..

வம்பு செய்தால்
புன்னகையோடு கடக்க...

நிழற்படம் எடுக்கையில் சலனம்
இன்றி அருகில் அமர..

உணவு உண்ணும் வேளை
எனக்கும் ஊட்டிட..

கலரா கைகோர்த்து நடந்திட...

வீட்டில் என் தோழி இவள் என அறிமுகப்படுத்திட..

உடல் சோர்வில் தாவி
அணைத்து தாங்கிட...

ஆடை விலகும் நேரம் தயங்காமல்
சரி செய்திட சொல்ல....

முகத்தை மட்டும் பார்த்து
பேசி சிரித்திட....

எந்நேரத்திலும் எனக்காய்
ஓடி வந்திட...

நள்ளிரவில் தடுமாற்றம் இல்லாமல் உரையாடிட...

என் வாழ்வில் கிடைத்த வரம் நீயடா

கண்ணை மட்டும் பார்த்து பேசி எந்நிலையிலும் நான் உன்னுடன் என உணர்த்தி எவரிடத்திலும் என் நண்பன் அவன் என உரக்க சொல்லும் அளவு எனக்குள் வேரூன்றி இருப்பவன் நீயடா...


ஆசைகள் ஆயிரம் Onde histórias criam vida. Descubra agora