மரணம்

329 36 52
                                    

உன் முகம் பார்த்து
தாமரை போல் மலர்ந்த
என் முகம் இன்று
உன் வருகைக்காக தவம்
இருக்கிறது...

அன்று இருவரும் சேர்ந்து
வரைந்த அழகான ஓவியங்கள்
எல்லாம் இன்று சுவரில்லாத
சித்திரமாய் நான் மட்டும் ...

விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே
காதல்.. ஆனால் நீ என்னையே விட்டு
சென்றாயே அன்பே....

ஈருடல் ஓருயிராய் வாழ்ந்து
இன்று நான் மட்டும் ஜீவனற்று
வாழ்கிறேன் ...

என் பேணா கிறுக்கல்கள் கூட
இன்று உன் நினைவுகளை
மட்டும் சுமந்து எழுதுகிறது ....

கடல் அலைபோல் என்றும்
நான் உன் மீது கொண்ட
காதல் ஓயாது அன்பே..

உன் நினைவால் வரும் கண்ணீரை
கூட துடைக்க உன் கரங்கள்
இல்லை என்று ........கல்லாய்
வாழ்கிறேன் இன்று ......துளியும் சிந்தாமல்

உலகில் மரணித்து போகும்
அணைத்து காதலுக்கும் சேர்த்து
நீயும் நானும் வாழ்வோம் என கூறிவிட்டு
இன்று நம் காதலே மரணமாய்...!!!!!!!!!

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now