என் ஆசை

115 10 25
                                    

என் கைவளைகளாய் நீ மாறி என் கைகளில் நீ வழுக்கி செல்ல ஆசை...

என் கைக்கடிகாரமாய் நீ மாறி எனை கட்டிக்கொண்டு சுற்றி வர ஆசை....

என் கால்கொலுசாய் நீ மாறி என்னிடம் எப்போதும் சத்தமிட்டு எனை தழுவிட ஆசை...

என் நெற்றி திலகம் நீயாய் மாறி என்னுடன் என்றும் உறவாட ஆசை...

என் மோதிர விரலை மூடி அதனில் அடிக்கடி முத்தமிடுகையில் மோதிரம் நீயாய் மாறிட ஆசை

என் உடல் உத்திரத்தின் உயிர் உன்னால் நிறைந்திட ஆசை...

என் ஆசையெலாம் உன் விழிப்பார்த்து கூறிட ஆசை...

விண்ணில் பறக்காமல் உன் இதயத்தில் கூண்டு  கிளியாய் அடைபட ஆசை..

என் கவிதை அனைத்திலும் உனக்கான காவியம் படைத்திட ஆசை...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now