என்னவனே உனக்காக

88 17 34
                                    

ஏனோ உன்மீது
கொண்ட காதல்
மட்டும் மறைத்தாலும்
வளர்ந்து கொண்டே
இருக்கிறது நிமிட
நேரம் கூட ஓய்வில்லாமல்

கரையை தாக்கும்
அலைகளை போன்று
நிதமும் என்னை
அடிக்கிறது உன்னுடனான
காதல் மலர்ந்து
மனம் வீசுகிறது...

பூட்டிய உணர்ச்சிகளின்
ஜன்னலை மூடுகையில்
கதவினை உடைத்து
உள்ளே நுழைந்து
உயிரை ஊடுருவி
செல்கிறாய் மிதமான
தென்றல் காற்றாய்......

உள்ளத்தில் உணர்ந்த
காதலை உதட்டால்
சொல்ல ஏனோ
நா எழ மறுக்கிறது
கண்களுக்குள் உன்
உருவத்தை பதித்து
நினைவுக்குள்
உறவாடுகிறேன்..

நாயகனின் வருகை
உளத்தினில் ஊர்வலமாய்
அவனுடன் உலவருகிறேன்
இன்று உன்னவளாய்
உன் கைகோர்த்து இனி
என்றென்றும் உன்னுடன்....

நெற்றி திலகத்தில்
நீ ஒற்றை முத்தம்
இடுகையில் வெட்கி
தலை குனிகிறேன்
நடப்பது தினமெனிலும்
புதிதாய் தெரிகிறது
ஒவ்வொருநாளும் .....

Title sonathu UmaThirunavukarasu epo post potalum mostly first cmd vathudum....😍😍😍😍😍😍

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now