இதயம் என்ன மூன்றாம் உலக போரா நிறுத்தாமல் யுத்தம் செய்கிறது உன் நினைவோடு..
என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்து என் இதயம் கூட எதிரியாய் தெரிகிறது..
அவனை பற்றி என்னும் போதெல்லாம் அடிக்கடி சத்தமிட்டு தொந்தரவு செய்கிறது...
கடலில் விழுந்த மழைத்துளி போல் அவன் காதலோடு கலந்துவிட்டேன்...
காதல் இதுவென்று உணரும் முன்பு ஏதும் ரசிக்க தோணவில்லை....
இது தான் காதல் என்று நீ உணர்த்திய பின் கல்லை கூட சிலையென ரசிக்கிறேன் அதற்கு உயிர் கொடுத்து.....
உன் நெஞ்சத்தை பஞ்சனையாய் மாற்றி தலை சாய்த்து அதில் துயில் கொள்ள வேண்டும் உன் அணைப்பில்.....
மாயவனே என்ன மாயம் செய்தாய் எழுதுகோல் எடுத்தாலே எழுத்துக்கள் அனைத்தும் உனக்காகவே பிறக்கிறது...
இரவு தேய்கிறது உன் நினைவோ என் உறக்கம் கலைத்து என்னை உரசி உறவாடுகிறது...
என்னை தேடி பார்க்கிறேன் எப்படி மறந்து போனேன் உன்னுள் தொலைந்து போனதை.....
உன்னோடு வாழ போகும் நினைவுகளே என் வாழ்வை அழகாக்குகிறது ஆழ்மனதில் காதலோடு...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....