உன்னிடத்தில் என் மனதை
இழந்தேன் நீ காதல்
கொண்டு வருவாய்
என காதலோடு
காத்திருந்தேன் காலங்கள்
தான் கடந்து சென்றதுஉன்மீது தவறு இல்லையே
எதிர்பார்த்து ஏமாந்து
போனது
நானாக தானேகாதலை
கண்ணசைவில்
உணர்த்திவிடலாம்
என நான் எதிர்பார்த்தது
தவறுதான்உன்னை பார்க்கும்
நிமிடமெல்லாம்
என் காதல் வளர்பிறை
போன்று
வளர்ந்து கொண்டே
இருக்கிறது
எனக்கே தெரியாமல்ஆகாயத்தின் மீது ஆசை!!!!
கருமேகம் மேல் ஆசை !!!!
சந்திரன் மீது ஆசை !!!
சூரியன் மீது ஆசை !!!ஆசைப்படும் அத்தனையும்
அடைத்துவிடும் தூரத்தில்
இல்லையே ...அதில் நீயும் ஒருவனாகி
விட்டாயே ....
அவைகளாவது
தொலைவில் உள்ளது
நீ அருகில்
இருந்தும் அணைக்க
முடியவில்லையே ..என்றோ ஒருநாள்
சேர்ந்துவிடுவோம்
என எண்ணி வாழ்ந்தேன்
உன்னை மணக்கோலத்தில்
பார்க்கும் வரை ...என் காதல் கடைசிவரை
உனக்கு புரியவில்லையா
அன்பே......எனக்கு உரிமை இல்ல
பொருளில்
ஆசை கொள்வது தவறு
மூளைக்கு தெரிவது
மனதுக்கு
புரியவில்லையே ...விழியில் தேக்கிருந்த காதல்
அனைத்தும் இன்று
விழிநீராய் வழிகிறது .....எல்லா உறவும்
இருந்தும் இன்று
தனிமை மட்டும் விரும்பி
ஏற்கிறேன் நீ எனக்கு
இல்லை என்பதால் ....இன்று மரணத்தை
நோக்கி காத்திருக்கிறேன்
நீ என்னுடன் இல்லாத
வாழ்க்கை வாழ
விரும்பாமல் .....மரணத்துக்கும் என் எதிர்பார்ப்பு புரியவில்லை போல
என்னிடம் வராமல் சோதனை செய்கிறது ............
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....