ஊடலின் கூடல்

77 14 105
                                    

உன் வார்த்தைக்காக பல மணிநேரமாய் காத்திருக்கிறேன்...

உன் மௌனம் என்னை வதைக்கிறது
காரணம் புரியவில்லையே..

ஆனால் உன் உதட்டோரம் தெரிகிறதே அழகான ஒற்றை கீற்று புன்னகை....

இது தான் செல்ல சண்டையோ புரிந்து விட்டது கண்மணி...

இரவோடு நீ கேட்ட கேள்வியும் உனை சீண்ட நான் சொன்ன பதிலும்....

இப்போது உன் பொய் கோபமும் தெளிவாய் தெரிந்து விட்டது...

உன்னிடம் கெஞ்சி நான் கொஞ்ச நீ அடம்பிடிக்கிறாயா....

அறிந்துவிட்டேன் உன் ஆசை விட்டுப்பிடிக்கிறேன்  கண்மணி....

தேனீர் நீ தரவில்லை என்றால் நானே போட்டு கொள்கிறேன் உனக்கும் சேர்த்து....

இதோ பிடித்துவிட்டேன் என்மீது தான் உனக்கு கோபமே நீ அணைத்து முத்தமிட வேண்டாம்...

நானும் கோபமாய் தான் இருக்கிறேன் காலை எனக்கு கொடுக்கும் நெற்றி முத்தம் இல்லை....

என் உறக்கம் நேரம் அதிகமாகும் நேரம் நீ சீண்டி கொண்டு என் துயில் போக்கும் சேட்டை இல்லை...

உனக்கு பிடித்தமான சட்டை நான் அணிவிக்க இன்று என் மேஜையில்
சட்டை இல்லை...

இப்போது என் அணைப்பில் உன் கற்றை முடி விலகி நீ மெய் சிலிர்த்து நிற்கையில் எனக்குள் இருந்த கோபம் துளியும் இல்லை...

அறிவேனே அன்பே உன் கோபம் எனை காணும் வரை தான் என...

இதோ நீ என்றும் சொல்லும் வார்த்தை என் மனதை தினமும் கவரும் மாயவள் நீயடி என ஒற்றை வரி நீ கூறினால் போதுமே உடனே உருகிடுவேனே...

அதை நீ அறிந்தும் எனை ஏங்க வைத்து ரசிக்கிறாயே அறிவனே உன் காதலை...

இதோ உன் நெஞ்சிலே புதைந்துவிட்டேனே
என் கோபம் எதுவென்றே மறந்தேனே...

ஊடலோடு காதலும் காதலோடு கூடலும்
கலந்தாட செய்யும் அழகான காதலின் வாழ்க்கையை ரசித்துக்கொண்டே வாழ செய்யும்....

நடை தளர்ந்தாலும் துணை சண்டையிட்டு
சமாதானம் செய்ய ஏங்குவதை கண்டாலே
மனம் தளர்வின்றி காதல் செய்திடலாம்...

natpae oru valiya ne sonna title eluthi muduchuten....Unaku puduchuruka therila ana ithuku mela en brain la edhum ila yosikka...im_dhanuu

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now