பலநாள் சந்திப்பின் பின் நண்பர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்க திடீரென... என்னைவிடுத்து அனைவரும் உன்னிடத்தில் திரும்பி கதைக்க நீயோ அமைதி காத்து பதில் ஒன்றும் சொல்லாத போதும் நண்பரகள் உன்னிடம் பேசிக்கொண்டே போக எனக்குள் பொறாமை தீ தான் பரவவேண்டும் ஆனால் அதை கண்டதும் எனக்கு உன்மீது காதல் முளைத்ததே... உன் கன்னக்குழி சிரிப்பில் மயங்கி போனேன் அந்த பிஞ்சு விரல்கள் கொண்டு கை தட்ட... யார் பேசுவதும் புரியாத போதும் எதற்கோ நீ தட்டி தட்டி சிரிக்கையில் காதல் பூத்து கொண்டே இருக்கிறதே....
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....