மாயம்

71 19 73
                                    

கட்டி போட்ட மனசை களவாடி எனக்குளே உறவாடி இன்று நீயே அதில் சிம்மாசனமிட்டு ஆட்சி செய்கிறாய்..

இதுயென மாயம் புரியவில்லை உன்னை கண்டதும் வார்த்தை தந்தி அடித்து மௌனமாகிறது..

காதோடு கம்மல் பேச அதனோடு நீ பேச நெருங்கி உரசையில் உன் மீசை குத்தி
என்னை கூச செய்கிறதே...

கடிகார முள்ளாய் சேர்ந்தே இருந்து  நிமிட முள்ளாய் நீ என்னை சுற்றியே வரவேண்டும்.....

காதல் வானில் இதயமிரண்டும் றெக்கை கட்டி பறக்கிறது ஆனந்த கடலில் அலையடித்து அழகாய் மிதக்கிறது....

எப்போது என்னை திருடினாய் ரகசியம் அறியவிலையே என கேட்ட நொடி மீண்டும் திருடிக்கொண்டாயே கள்வா....

கனவா நிஜமா அறியவில்லை ஆனால் காதலோடு உன் கையில் மிதக்கிறேன் உன் விழி பார்த்து...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now