ஆசை

106 20 174
                                    

கொடிய உலகில் கொடூரமான
உயிர் நான்...

அன்பை மட்டுமே எதிர்பார்த்து
அன்பால் அரக்கத்தனமாய்
மாறிய உயிர் நான்..

எனை தேடி எவர்வந்தாலும்
வெறுக்க தெரியாத
அன்பால் மட்டுமே அடிக்க
நினைக்கும் ராட்சத மிருகம் நான்...

எனை வெறுப்பவரையும்
நேசிப்பதற்கு மட்டுமே  மனம்
படைத்த ஜடம் நான்....

எனை போல் நீயும்
இருத்துவிடாதே..

எவரையும் வெறுக்காதே...
யாரையும் அளவு கடந்து
நேசிக்காதே...

இந்த அரக்கன் போல்
தனிமையில் அழ நேரிடும்..

ஆறுதல் தேடி தவிக்கும்
வாய்ப்பு வந்துவிடும்..

யாரோ சொல்ல கேட்டேன்
மனம் ஒன்றே இல்லை போலும்
எதையும் நினைத்த பார்க்க
தெரியாது மிருகமாய்
இருக்கிறாய் என்று...

அந்த மாயவனுக்கு
தெரியவில்லை ஒருமுறை
என்னை போல்
துடிதுடித்தால் எல்லாம்
மரத்து விடுமென.....

இந்த மூர்க்கமான அரக்கத்தனம் நான் விரும்பி ஏற்று கொண்டது...

இனி விதி சதி செய்தால் கூட என்னை விட்டு விலகாது....

என் ஆயிரம் ஆசைகளில்
ஆசையோடு ஏற்றுக்கொண்ட
அழகான ஆசை இது...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now