மன்னவனுக்காக

90 24 92
                                    

உன் அரும்பு மீசை
கொண்டு
குறும்பு செய்யும்
வேலை உடல் சிலிர்த்து
உயிருக்குள் ஒரு
புது உணர்வு......

என் கூந்தல் மணம் கண்டு
என் கழுத்து வளைவில்
உன் முகம் புதைத்து.....

ஒற்றை முத்தம் இடுகையில்
உயிர் மொத்தம் ஆடி
அடங்குகிறது.....

புதிதான மாற்றம் புரியாத
ஏக்கம் புதிதாய் உனக்காக
எனக்குள் அழகாக....

உன் விழி கொண்டு எனை
காண்கையில் என் விழி
தானாய் இமை தாழ்த்தி
பார்க்கையில்....

உன் கரம் கொண்டு
நிமிர்த்தி உன் உரிமை
பறைசாற்ற 
இதழ் கொண்டு எனை
ஆட்கொள்ளும் நேரம் புதிதாய் பிறக்கிறேண்டா...

உன்னுடன் எனை மறந்து
இருக்கையில் எங்கோ ஊர்
குருவி கத்தும் சத்தம் விழித்து 
கொண்டேன் கண்ட
கனவில் இருந்து.. ..

உயிர் உருகும் ஒரு வார்த்தை
உன் வாய்மொழியால்
கேட்க ஆசையடா...

உனை காணாது இன்னும்
நீ என் முகம் கண்டு
சொல்லாத போதே நெஞ்சில்
வேரூன்றி வளர்கிறதடா
உன் மீது நான்
கொண்ட காதல் .......

மனதில் அத்தனை கனவுகள்
மன்னவனின் வருகைக்காக........

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now