தேடல்

255 17 36
                                    

உனக்கான என் தேடல் உயிரான என் தேடல்
எதையும் தொலைக்காமல் எதையோ தேடுகிறேன்.. இழக்காமல் தேடுகிறேன்
இழந்து விட கூடாது எனதானோ......

கனவில் வருவது நிஜம் இல்லை என அறிந்தும் நித்தமும் தேடுகிறேன் நிஜத்தில் கிடைத்து விடுவாய் என்று உருவமே இல்லாமல் தேடுகிறேன் உணர்வுகள் கொண்டு... ..

உன்னை மட்டும் இதயத்தில் வைத்து சுமக்க இமைக்காமல் தேடுகிறேன் என் ஆழ்மனதில் வைத்து பூட்டிக்கொள்ள....

தாய் மடித்தேடும் சேய் போல தவிக்கிறேன்
உன்னையே தேடிதேடி என்றோ என்  கண்ணில் கண்டுவிடுவேன் என்று.....

ஆசையோடு தேடல் அமைதியான தேடல்
சுகமான தேடல் சுவாரசியமான தேடல்
உனக்காக தான் அன்பே ஆனால் உனை
இன்னும் அறியவில்லையே....

நிற்காது ஓடும் கடிகார முள் போல் உன்னை தேடி ஓடுகிறேன் வாழ்க்கை பயணமே தேடலில் தானே அடையமுடியும் கனவில் தொடங்கிய தேடல் இன்று நிஜத்திலும் உனக்காக

இன்று வரை தேடலின் முடிவில் தினம் தினம் தோற்க்கிறேன்  ஆனால் உனை தேடும் முயற்சியில் தோற்காமல் தேடுகிறேன் உன்னை நெருங்கிவிட்டேன் என்ற நம்பிக்கையோடு..

என் தேடலின் முடிவில் உன் முகம் கண்டு
மலராய் மலர்ந்து மனதோடு பேசிக்கொள்ள
மகிழ்வோடு தேடுகிறேன் கிடைக்கும் நாள் தெரியாமல் என்றும் தேடலுடன் நான் உனக்கே உனக்காய் உயிருள்ளவரை...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now