என்னுயிரே

99 16 285
                                    

கண்ணிமைக்கும் நேரத்தில் என் முன் தோன்றி மின்னெலான எனக்குள் வந்து நானே எதிர்பாரா நேரம் என் இதயத்தை பறித்து என்னை ஆளப்போறவனே....

ஆயிரம் வேளை இருந்தாலும் ஒருமுறையேனும் என் கைபிடித்து என்னிடம் பேசிடு இல்லையென்றால் அந்நாள் முற்று பெறாதெனக்கு....

நிதமும் உன்னிடம் சண்டையிடுவேன் பலவாறு சிந்தித்து வை சமாதானம் செய்வது எப்படி என ஆனால் அருகில் வந்துவிடாதே   சூரியனை கண்ட பனித்துளி போல் உருகிடுவேன் உன்னோடு அக்கணமே...

இனிமை எடுத்து என் இதயத்தை நிறைக்க போறவனே இல்லறத்தை நல்லறமாய் ஈடு இணைன்றி காதல் செய்து என்றும் எனை
தாங்கிக்கொள்ளடா...

இன்று உனக்காகவே துடித்து கொண்டிருக்கும் இதயம் நாளை உனக்காகவே துடிப்பதை நிறுத்தும் நம் வாழ்நாள் பயணம் முடியும் நேரத்தில்...

காலம் முடியும் நேரம் என் அருகில் அமர்ந்து என் கண்ணில் இதழ் ஒற்றி கைகோர்த்து தோள் சாய்த்து என் தலை கோதிடு இறுதி பயணம் இனிமையாய் முடியும்..

என் வாழ்க்கையில் இம்மையிலும் மறுமையிலும் என் சரிபாதி ஆகப்போற என் உயிரான என்னுயிரே... ..

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now