விழியில் தேக்கி வைத்திருக்கும்
காதலை உன்னிடம் சொல்ல நினைக்கிறேன்சொல்லிவிடும் எண்ணத்தில் உன் விழி
பார்க்கையில் என் நாணம் வந்து தடுக்கிறதேயாருக்கும் கட்டுப்படாமல் பெண் சிங்கமாய்
இருந்த என்னையும் வெட்கம் கொண்டு
தலைகுனிய வைத்துவிட்டாயே உன் கடைக்கண் பார்வையால் ...உன்னை பார்த்து மட்டும் என்னுள் நிகழும்
மாற்றம் ஏனோ.. ..எனக்கே தெரியாமல் எனக்குள் நுழைந்துவிட்டாயே கள்வா...
உன் பார்வை கூட என்னை இம்சிக்கிறதடா
காதல் சொல்ல வந்துவிட்டேன்
ஆனால்
உன் கண்ணை பார்த்ததும் மயங்கி
மறந்துவிட்டேனடா சொல்ல வந்தது என்னவென்று ..இந்த காற்றின் மீது எல்லை இல்லா பொறாமை எட்டி பார்க்கிறது..... ....
நான் உன் கண்ணை கூட காண தயங்குகிறேன் இந்த காற்று மட்டும் உன்னை அடிக்கடி உரசியே
செல்கிறது......உன்னை தீண்டும் காற்றிடம் சண்டையிட்டு
உன் தோள் நான் சாய்யா ஆசை எழுகிறதடா...இனி வாழும் நொடி முழுதும் உன்னுடனே பயணித்திட ஆசையடா இன்பத்திலும் துன்பத்திலும்.......
ESTÁS LEYENDO
ஆசைகள் ஆயிரம்
Poesíaமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....