நம் மனம் (திருமணம் )

163 32 143
                                    

நீ என்ற சொல்லின் அர்த்தமாய் 
நானும் ..

நான் என்ற சொல்லுக்கு பொருளாய்
நீயும்...

நாம் என்ற வாழ்க்கையின் ஜீவனை
பெற்று..

மலர்ந்த அன்போடு மணம்
வீசி....

என் மனதை நீ படித்து...

உன்  அன்பில் நான் 
கரைந்து...

நெஞ்சம் நிறைந்த காதலோடு காலமெல்லாம் வாழ்ந்து....

காதலின் அடையாளமாய் கண்ணாக இரண்டு முத்துக்கள் பெற்று
சிறப்பாய் வாழ்ந்து ....

நீ கொள்ளும்  சிறுகலகத்தில் நான்
தாயாய் மாறி...

என் இயலாமை நேரத்தில் நீ  தாயாய்  அரவணைத்து....

நல்லதோர் இல்லறம் செய்து ...

என் மௌனத்தின் மொழிகளை நீ
புரிந்து...

உன் கோபத்தின் காரணம் நான்
அறிந்து....

நாம் போடும் சண்டைகள் அனைத்தும்
அரை நொடியில் தீர்ந்து..

யார் பேசவேண்டும் என்ற தயக்கமின்றி
உடனே அணைத்து...

என் மனதை நீ அறிந்து உன் மனதை
நான் புரிந்து

நம் இருமனதையும் இணைக்கும்
திருமணம் என்னும் பந்தம் என்று வந்து சேரும் நம்முள் !!!!

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now