பெண்ணாய் பிறக்க ஆசை

86 21 68
                                    

அவன் மனதில் நான் மட்டும் குடியேற ஆசை...

அவன் விழியில் என்றும் என்னை கண்டிட ஆசை..

சண்டை நான் பிடித்தால் அவன் வந்து கெஞ்ச ஆசை...

சின்ன சின்ன ஊடலில் அவனிடம் தோற்க ஆசை....

அவன் கேட்கும் முன்பே அவன் ஆசை நிறைவேற்ற ஆசை...

அவன் தோள் சாய்ந்து தொலைதூர பயணம் போக ஆசை...

அவன் எனக்காய் சமைத்து ஊட்டிட ஆசை....

நான் செய்யும் சிறு தவறெல்லாம் மன்னிக்காமல் உடனே அவன் மறந்து விட ஆசை...

எனக்காய் கவிதை எழுதி அவன் படித்து நான் ரசிக்க ஆசை...

அவன் திருட்டு தனம் அறிந்து மறைக்க  சொல்லும் சின்ன சின்ன பொய் கேட்க ஆசை...

அவன் கைபிடித்து மருதாணி வைத்து விட ஆசை..

என்றும் எனக்கு தோழனாய் அவன் இருந்திட ஆசை...

இம்மண்ணில் வாழும் வரை அவன் என்னுடன் இருக்க ஆசை...

உயிர் பிரியும் வேலை அவனுக்கு முன்னால் போக ஆசை...

மறுபிறவி இருந்தால் மீண்டும் என்னவனுக்காக  பெண்ணாய் பிறக்க ஆசை......

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now