🤔🤔🤔

71 23 85
                                    

இவ்வுலகில் காதல் அழகா இல்லை காதலை  பார்வையால் உணர்த்தும் உன் கண்கள் அழகா என்று கேள்வி எழுப்பினால் தேவனே திணறுவானடி ..

நீ போடும் சண்டை எல்லை மீறுகையில் உதட்டால் உன்னிடம் நானும் எதிர் வாதம் செய்தாலும் நீ போடும் சண்டை உள்ளூர இன்றும் ரசிக்கிறேனடி... .

உன் விரல் கொண்டு சிறிதாய் தீண்டினாலும் உடலில் மின்வெட்டு உணர்ந்து உனை நோக்கினால் உன் விழி அசைவில் மொத்தமாய் தொலைகிறேனடி..

வென்னிலாவை ரசிக்கையில் நீ அருகில் வருகிறாய்  உன் மதிமுகம் கண்ட பின்பு அழகாய் ஒளிர்வது நிலவா இல்லை என்னவளா என்று குழம்பி தவிக்கிறேனடி ....

பட்டம் படித்து முடித்தும் உன் மனம் தெளிவாய் படிக்க இன்னும் தெரியவில்லையடி என் சரிபாதியே..

எப்படியடி ஊருக்கு அடங்க மறுப்பவனை உனக்குள் இஷ்டப்பட்டு கட்டுண்டு கிடக்கவைத்தாய் வித்தை கற்றதெப்படி...

சிறகின்றி பறக்க விரும்புபவளே   என் இதயத்துக்குள் மட்டும் எப்படி இதமாய்  அடைப்பட்டு இருக்க விரும்பி நுழைந்தாயடி ...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now