எட்டாத ஆசை

85 24 130
                                    

அம்மாவாசையில் நிலவொளி காண ஆசை....

காற்றை கையில் பிடித்து கட்டி போட ஆசை....

தண்ணீரை ஒருமுறையேனும் கிள்ளி விட ஆசை...

நிலவை கையில் ஏந்தி கொண்டு ரசித்திட ஆசை...

சூரியனை சுற்றி வரும் கோள்களில் ஒன்றாய் மாறி சுற்றிட ஆசை..

நிலா சோறு உன்ன நிலவுக்கே செல்ல ஆசை..

பால்ய காலத்திற்கு சென்று அறியாமல் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கூறிட ஆசை..

கடந்த காலம் சென்று என் கால சக்கரத்தை சரியாய் அமைத்திட ஆசை..

காட்டிற்கு சென்று சிங்கத்தின் மேல் சவாரி செய்திட ஆசை..

ஆண்டு தோறும் குறிஞ்சி பூ மலர்ந்து அழகாய் சூடிக்கொள்ள ஆசை....

கூவும் குயிலுக்கு இணையாய் நானும் கூவி அதனிடம் போட்டியிட ஆசை...

கம்பன் இயற்றிய கவியில் ஒன்றாய் நானும் அமைந்து அனைவரும் எனை படித்திட ஆசை...

பாரதிக்கு பாட்டெழுதி அதை அவனிடமே வர்ணித்து பாடி காட்ட ஆசை..

என்றோ கவி எழுதும் போதே என் உயிர் இம்மண்ணில் மடிந்திட பேராசை.....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now