போர்தொடுக்கமால் விழி ஈர்ப்பால் எனை முற்றிலும் வீழ்த்திய வீரனே...
மங்கைக்கு நாணம் வழிகிறதே மன்னவன் மல்லிச்சரம் முதன் முதலில் சூடுகையில்..
வெட்கி தலை குனிய கன்னி இவள் கன்னம் சிவக்கிறதே கண்ணாளன் கண் சந்திக்க முடியாமல்...
மனம் உருகி போகிறதே தலைநிமிர்த்தி உன் கரம் கொண்டு கன்னம் தொட்டு பேசுகையில்.. .
உன்னிடம் பேச நினைக்கும் வார்த்தையெல்லாம் கவிதையாய் என் மன பெட்டகத்தில்...
மௌனமே வார்தையானால் எனை முழுதும் படித்து ஆசைகளின் அர்த்தம்
அறிபவனே ..என்னுயிர் மடிந்தாலும் உன் மீது நான் கொண்ட நேசம் எழுத்தால் என்றும் இவ்வுலகில் மலர்ந்து கொண்டு ஜீவனிக்குமே ....
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....