உன் விழி சந்திக்கையில்
என் கோபம் கூட
மறந்து தான் போகிறதடி....என் பிடிவாதம் மொத்தமும்
உன் காதலின்
முன்னால் விலகுதடா ...உனை ரசிக்க தொடங்கிய
பின்னே
எனக்குள் கவிதை பிறந்ததடி .உன் கவிதை படிக்கவே
மொழிகள் அனைத்தும்
விழிவிரித்து ஏங்குதடா...உன் சிலநேர பிரிவும்
எனை வேறேதும்
சிந்திக்கவிடாமல் இம்சிக்கிறதடி...நொடிநேர பிரிவிலும் உன்
நினைவோடு
அழகாக பயணிக்கிறேனடா ..சிறிது நேரம் கண்
அயர்ந்தாலும் கனவிலும்
நீயே வருகிறாயடி....கனவிலும் உன் முகம் காண
இன்று உறக்கம்
விரும்பி ஏற்கிறேனடா....உன்னிடத்தில் என்பதனால்
தான் இன்று கெஞ்சல்
கூட பிடித்த ஒன்றாய் ஆனதடி..நீ கெஞ்சி கொஞ்சுவதை
ரசிக்கவே உன்னிடம்
சண்டை பிடிக்கிறேனடா...எனை கண்டு நீ நாணம்
கொள்கையில் உனக்குள்
மொத்தமாய் தொலைகிறேனடி...உன் விழியில் தேக்கிருக்கும் காதல்
கண்டு என் வெட்கம்
உடைத்து அணைக்கிறேனடா...ஆழமான காதலின் முன்னால் பேச வார்த்தையின்றி இருவரும்
நம்வசம் இழந்து ஓருயிராய் ஆனோமே.....
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....