வாராயோ

74 13 25
                                    

கரையை தேடி ஓடும் கடல்  அலைகள்
போல் உனை தேடியே அலைகிறது என்
மனது என் கரை கண்டு எனை சேர
என்று வாராயோ......

நிதமும் உன்னையே தேடுகிறேன்
உன் தோள் சாய்ந்து பல கதை பேசி
பசி மறந்து விழியோடு என்னுடன்
உறவாட என்று வாராயோ..

விந்தையாய் சிந்தையில் தோன்றி
விருப்பமாய் என்னுள் நுழைந்து
விலகாமல் என்னுடன் காதலோடு
பயணிக்க என்று வாராயோ..

புரியாத புதிராய் விடியாத இரவாய்
பதில் இல்லா கேள்வியாய் பேதை
உனக்காக காத்திருக்கிறேன்
அனைத்திற்கும் விடையாய் என்று வாராயோ ...

கணவனை காதலனாய் ஏற்றுக் கள்ளத்தனம் இன்றி காதல் செய்து எனக்குள் தோன்றும் கனவுகளை உன் காதலால் கலைத்திட  என்று வாராயோ ...

உன் காதலில் பூவாய் மலர்ந்து புதுவாசம் பெற்று என் மனம் அறிந்து நீ நடந்து
உனக்குள் என்னை தொலைத்து என் உயிரில் நீ கலந்திட என்று வாராயோ ....

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now