உன்னிடம் என்னை தொலைத்து
உன் வசம் மனதை இழந்து
வாழ்வில் உணரா தனிமை இன்று
உறங்கவிடாமல் வாட்டுகிறது
உனக்குள் என்னை தொலைத்துவிட்டு
வெளியில் தேடுகிறேன் எனை மறந்து
காயம் பட்ட மனது கழிவிரக்கம்
காட்டாமல் மீண்டும் உன்னையே காதலிக்கிறது
நேற்று புன்னகை தேசத்து
இளவரசி இன்று உன் நினைவால்
கண்ணீர் தேசத்தின் மகாராணியாக
வலம் வருகிறேன்...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....