அவனுக்காக

97 23 104
                                    

அவனோடு பேசுவது பிடிக்கிறதே கண்ணியம் மிக்க அவனின் பேச்சு
கேட்க கேட்க திவட்டமல் இனிக்கிறதே..

என் கண்களை மட்டும் கண்டு பேசும் அவனல்லவா பெண்மையை மதிக்க தெரிந்தவன்...

அவன் அருகில் இருக்கையில் தானே பெண்மையில் வெட்கம் என்பதும் உண்டு என அறிந்தேன் ..

அவன் விரல் பிடிக்கையில் என் வசம் மறந்து அவனையே பின்
தொடர்ந்தேன்...

அவன் எனை ரசிக்கவே மெல்லிய கூந்தலில் பூச்சரம் சூடினேன்....

அவன்  தோள் சாய்கையில் விண்மினெலாம் என் மீது
மிளிர்கிறதே.. ...

நடத்தை பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல ஆணுக்கும் தான் உணர்தேனே  அவனிடத்தில்..

பெண்ணை மதித்து நடப்பதும் தாய்மையே கண்டேனே அவனிடத்தில்..

அவனிடம் பேசவே ஆயிரம் ஆயிரம் ஆசைகளுடன் காத்திருக்கிறேன் அவனின் உரிமையான  வரவை எதிர்பார்த்து...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now