தரம்கெட்ட ஆண்மகனை
தவமிருந்து தமிழகம் பெற்றுள்ளதோ..???
மங்கைவளுக்கு பாலியல் கொடுமை !!!
பேதையிவளுக்கு பலாத்கார வன்கொடுமை !!!
சிசுயிவளுக்கு பாலியல் பலாத்கார வன்கொடுமையினும் கொடுமை.. !!!
இன்று சகோதரர் பலர் பதிவுகள் பயங்கரமாக பதிப்பித்துள்ளனர்...
பெண்களே கவனம் தேவை !!!!
பெண்களே சமூக வளையதளம் உபயோகிக்காதீர்கள்... !!
பெண்களே பாதுகாப்போடு இருங்கள்.. !!
பெண்களே நேரத்துக்கு வீடு செல்லுங்கள் !!!
பெண்களே எல்லாம் வீட்டில் சொல்லிவிட்டு செய்யுங்கள்.. !!!
பெண்களே ஆண்களுடன் அதிகம் பேசாதீர்கள்... !!!
பெண்களே யாரையும் நம்பாதீர்கள்.. !!!!
ஆஹா எவ்வளவு அருமையான எண்ணங்கள் இம்மண்ணில் உள்ள சில ஆண்மகன்களுக்கு... ::::
ஆனால் நானோ இது போன்ற பதிவை படித்து வெட்கி தலைகுனிகிறேன்.. ::::
யாரையும் நம்பாதே என கூறி பின் உன் உடன்பிறப்பை நம்பு உன் பெற்றோரை நம்பு என அழகாக கூறி உள்ளார்கள்.. !!!
நீங்கள் யாரும் படிக்கவில்லையா சில பல தமயன் தந்தையான மிருகங்களின் காமப்பசிக்கு இரையான சில பெண்களின் நிலை பற்றி ..?????
பாலியல் பலாத்காரம் என்ற செய்தி மறைந்து இன்று அவர்களின் அரக்கத்தனமான ஆசைக்கு பலியாகும் பெண்கள் அப்படி என்னடா கட்டுக்கடங்காத காமப்பசி உனக்கு அவளை உடலாலும் உள்ளத்தாலும் சிதைத்து உன் பசி தீர்க்க .. ...
எவளோ ஒரு பெண்ணை கதற கதற கொடுமை படுத்தையீல் உனக்கு நினைவில்லையா உன் பிறப்பு அதன் வழி வந்தது என்று ???
எவனோ ஒருவனை ஏன்னமா நம்பி சென்றாய் ஏன்னமா அவன் காதல் வலையில் சிக்கினாய் என பல சர்ச்சையான கேள்விகள் மிக நுணுக்கமாக தொடுக்கிறீர்கள்...
அழகான கேள்விக்கென இப்பிறப்பு எடுத்தவர்கள் !!!
அழகாக கேள்வி தொடுக்கும் ஆண்மகனே உனக்கு தெரியாத காதல் என்றால் நம்பிக்கை என்று...
காதல் என்றால் உணர்வென்று...
வீரமிக்க ஆண் யாருக்கும் இப்படி பட்ட கேள்வி கேட்க மனம் ஒப்பவில்லையா !!!
உன் பின்னால் காதலோடு ஆசையாய் வந்தவளை ஆபாசமாக படமெடுத்து அதை உன் நண்பர்களோடு கூறு போட உன் மனம் எவ்வாராடா இடமளித்தது என்று கேட்க துணிவில்லையா??? ..
கற்பு என்ற புனிதம் பெண்ணவளுக்கு மட்டும் உண்டு என்ற மேதாவி தனமா இல்லை உன்னால் ஊர் பார்க்க கர்பம் தரித்து ஒரு சிசுவை சுமந்து உனக்குள் உருப்பெற முடியாது என்ற தைரியமா..
இன்று நீ செய்யும் கேவலம் நாளை உன் பிள்ளையும் செய்தால் இந்த உலகம் தழைக்குமடா???
இல்லை இன்று நீ சிதைத்த பெண்களின் வாழ்வு போல் நாளை நீ பெற்றெடுக்கும் பெண்ணுக்கு உன் பாணியிலே எவனாவது செய்தால் உன் உயிர் துடிக்குமாடா??
இல்லை உன் இச்சையான காம பசி நாளை நீ பெற்றெடுக்கும் உன் பெண் மீதும் திரும்பும்மாடா??
பெண்களின் நலன் பேணிக்காக்க ஆயிரம் செய்தி ஆயிரமாயிரம் கவிதை ஓராயிரம் கட்டுரைகள் ஒருநாளில்...
ஆனால் அதில் ஒரு வீரமிக்க ஆண்மகனும் பெண்ணவளை பாதுகாப்பது உன் கடமை அவளின் பெண்மை மதிக்க படவேண்டியது உன்னால்... அவளின் காதல் பொக்கிஷத்தை பத்திரப்படுத்த வேண்டியது உன்னால்... அவளின் அந்தரங்கம் காட்சி பொருள் அல்ல.... அவளின் பெண்மை விலை பொருள் அல்ல... அவளின் கற்பு உன் காமப்பசிக்கு இச்சை இல்லை... என்று சொல்ல ஒரு ஆண்மகனுக்கும் நாவு எழவில்லையே எதனால்??
நானும் ஒரு ஆண்மகன் என் இனத்தை எவ்வாறு குறை கூறுவேன் என்ற பிணைப்போ??
இந்த மண்ணுலத்தில் மானிடராய் பிறந்து வளர்ந்த போது பெருமிதம் கொண்டேன் அதுவும் பெண்ணாய் பிறந்ததற்கு பேரின்பம் அடைந்தேன்.....
என் பிறப்பு என் தந்தையவனின் படைப்பு என உள்ளம் மகிழ்ந்தேன்..
இன்று உரு குலைகிறேன் இனியும் ஒரு ஆண்மகன் வழி பெண்மை விழித்தெழுந்து ஒரு படைப்பு இவ்வுலகிற்கு வேண்டுமாமென...
இந்நாட்டினை கண்ணென காக்கும் வீரமிக்க ஆண்மகனே உனது ஆண்மை கண்டு தலை நிமிராதே தகுதி இழந்துவிட்டாய்...
எவனோ செய்யும் கடும் செயலுக்கு இன்று கண்ணியவனும் தண்டிக்க படுகிறான்....
மனதில் தோன்றி பதிந்த இந்த கேவலம் இனி மண்ணுக்குள் போனாலும் மறையாதே !!!!யாராவது இதை படித்து கவலை பட்டால் எனக்கு நிச்சயமாக கவலை இல்லை...
தவறு செய்யாத ஆண்மகன் யாரேனும் வருத்தப்பாட்டால் எனக்கு நிச்சயமாக வருத்தமில்லை...
உன் இனம் தானே அவனை திருத்த ஏதேனும் ஒரு வழியில் நீ களமிறங்காத வரை இந்த அசுத்தம் கண்டிப்பாக உன் இனம் முழுதும் சாரும்....பதிவு யார் மனதையும் புண் படுத்தினால் கண்டிப்பாக இன்று வருத்தபடு பெண்களின் நிலை இவ்வளவு கொடுமையாக போய்விட்டதே என்று ஆனால் நாளை விழித்தெழு...
பெண்ணே இனியும் தயங்காதே உன்னிடத்தில் எவரேனும் அத்துமீறினால் உன் பலம் கொண்டு தாக்கு !!!நாளை ஏதேனும் பெண்ணை கண்களால் பார்க்க கூட அவன் அஞ்ச வேண்டும் !!!!உன்னை பாதுகாக்க அவன் ஆண்மையை அழித்தாலும் தவறில்லை....என்றாவது ஒருநாள் இது போன்ற கேவலம் மறைந்து பெண்களின் வாழ்வு சிறக்க வேண்டும் என்ற ஆசையோடு இப்பதிவு...
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....