🤩💕🤩

174 9 33
                                    

காலை மாலை காதலில் குதித்து முத்தெடுக்க கண்ணாளன் கற்றுக்கொடுக்கையில் இதயம் காற்றில் பறக்கிறதே..

கருவிழியை இருவிழி உற்று நோக்குகையில் எங்கிருந்து பிறக்கிறது இந்த நாணம் அறியலையே...

அவன் சிரிப்பு சத்தத்தை கேட்கையில் சிந்திக்கவும் மறந்து போகிறதே...

தூரமாய் இருக்கையிலும் நெஞ்சுக்குள் அவனது துடிப்பு நெருக்கமாய் கேட்கிறதே...

உதட்டின் பரிமாற்றம் போதுமே உணவு கூட மறந்து போகுமே...

கற்பனை மொத்தமும் கவிதையாகிறதே அவனை நினைத்து கிறுக்குகையில்...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now