இந்த வாழ்க்கை தான் எவ்வளவு வித்தியாசமானது
தனிமை வேண்டி தனித்து
இருந்தேன்ஆனால் நினைவலைகள் முழுவதும் நீயேநீ எனக்கு இல்லை என்று சொல்லிவிட்டு
உன் நினைவுகளை மட்டும் ஏன் என்னிடம்
விட்டு சென்றாய் அன்பே....உனக்காக நான் இல்லை என்று
ஒருமுறை நீ சொல்லிருந்தால்
உன்னை மட்டும் இன்று
எதிர்பார்த்து காத்திருந்தது இருக்கமாட்டேனே..நீ தான் எனக்கு என முடிவு எடுத்த
பின்பு இப்படி ஒரு பிரிவை
என் மனம் தாங்கிவிடும் என தவறாக நினைத்து விடாயேஉன்னிடம் பேச நினைக்கும் அத்தனை வார்த்தைகளும் இன்று மௌன மொழிகளில் என் மனதுக்குள்
கவிதைகளில் அழகான வரிகளை மட்டும்
உன்னிடத்தில் சொன்ன நான் இன்று
ஆழமான வலிகளோடு மட்டும் எழுதுகிறேன் உன் நினைவால்சில நேரம் இருவரும் சேர்ந்தே பயணிக்கின்றோம் விடியல் வரும்
வரை கனவில் மட்டும் ...
அந்த அழகிய நேரங்கள் மட்டும் ஏனோ நிமிடங்களாய் கரைந்துவிடுகிறதுநீ பார்க்காமல் பேசாமல் இருந்தாலே தாங்கிக்கொள்ளாத என் இதயம் இன்று
வேண்டாம் என்று சொன்னால் மடிந்து
விடும் என புரியவில்லையா அன்பேகைகோர்த்து நடக்கும் பொழுது என்னை கைவிட்டுவிடாதே என்று சொல்லிவிட்டு நீ விலகிவிட்டாயே ....இன்றும் அதே ஆசையில் காத்திருக்கிறேன் உன் கரம் பிடிக்க ..வரமாட்டாய் என அறிந்தபோதிலும்
நீ என்னை பிரிந்த போதில் மறந்து வாழலாம் என நினைத்தேன் ஆனால் மறந்து போன உன்னால் நிறைந்து
போன நினைவுகளை
மாற்றி கொண்டு வாழமுடியவில்லையேநீ என்னை பிரிந்தது உண்மை என தெரிந்தும் உனக்காகவே வாழ்கிறேன்.....உள்ளத்தையும்
உணர்வையும் உன் வசம் ஈர்த்து
உயிருக்குள் புதைந்துவிட்டாயே
நானே என் வசம் இல்லாத போது
எனக்காக வாழமுடியுமா என்ன ...கானல் நீர் போல் இருந்த என் கண்ணீர் இன்று அடைமழையாய் நிற்காமல் பொழிகிறது உன் நினைவால் ....
தினம் தினம் பூத்த என் புன்னகை
எல்லாம் இன்று ஏனோ என்றோ சிந்தும் மழைத்துளி போல் ஆகிவிட்டது
YOU ARE READING
ஆசைகள் ஆயிரம்
Poetryமனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....