முடியாத பயணம் உன்னுடன்

166 18 81
                                    

மனம் முழுக்க
காதல் மலர்கள்
பூத்து குலுங்குகிறது....

உன்னோடு
உரையாடிய நினைவு
எல்லாம் வீதியில்
நடக்கையில்
நினைவு திரும்பி
சிரிக்க வைக்கிறது
பார்ப்பவன் பைத்தியம்
என என்னும் அளவிற்கு...

அவர்களுக்கு எப்படி
தெரியும் உன் மீது
நான் காதலில்
விழுந்த அன்றிலிருந்தே
பித்தனாய் அலைவது...

சிலகாலமாய் நான்
என்னையே ரசிக்கிறேன்
உன்னிடத்தில் அழகாய்
தெரிய வேண்டுமென ...

ஒவ்வொரு நொடியும்
உனக்கவே
காத்திருக்கிறேன்...

உன் தாமதமான
வருகை எனை அதிகம்
கோபப்படுத்தி சண்டை
பிடிக்க வைக்கும் 
என அறிந்தும் நேரம்
தாழ்த்தி தான் வருகிறாய்...

ஆனால் அந்த
சண்டையில் கூட 
நம் காதல் இன்னும்
அதிகம் பலப்படுத்தபடுகிறது
உனக்காக நான்
சண்டையிடுவதும்
எனக்காக நீ
சமாதானம் செய்வதும்...

சிலநேரம் கட்டுப்பாடு
இழந்து என் கோபம்
எல்லை மீறுகையில்
என் மீது உள்ள காதல்
மறந்து பிரிந்து
சென்றிடுவாயோ
என்ற அச்சம் எனக்குள்

ஆனால் நீயோ என்
கோபத்தில் உள்ள
அன்பை கண்டு நான்
செய்யும் முட்டாள்தனத்தை
மறந்து என்னை புரிந்து
கொண்டு சிரிக்கிறாய்..

சிலநேரம் பிடிவாதமாய்
நடக்கும் வாதத்தில்
பேசாமல் சென்று
உன்னோடு பேச
நினைக்கும் வார்த்தைகளை கட்டிபோடுகிறேன்...

நீயோ ஏதும் நடவாதது
போல் நொடிக்கு ஒருமுறை
எனை தோற்கடிக்கிறாய்
உன் காதல் மொழியால்...

காதல் கூட ஒருவித
போதை தானோ
உன் நினைவு வந்தாலே
உன் அணைப்பிலே
இருக்க துடிக்கிறது..

புதைகுழியாய் இருந்த
என் வாழ்வு இன்று
பூந்தோட்டமாய் மலர்கிறது
உன் அன்பெனும்
நீர் குறைவில்லாமல்
பாய்வதனால்..

உன்னுடனான காதலை
வெளிப்படுத்த என்
கவிதை போதும் ஆனால்
உன்னோடு வாழ நினைக்கும்
ஆசைகள் எல்லாம்
தொடர்கதையாக நீண்டு
கொண்டே செல்லும்
வாழ்வின் எல்லைவரை
முடிக்கமுடியாமல்..

காதலும் கவிதையும்
ஒரு பிறப்பு  போலும்
உன் காதலோடு கவிதையும்
என்னுடன் பயணிக்கிறது
உனக்காக...

பல கவிதை எழுதுகிறேன்
எதிலும் உன் நினைவுகளின்
சாயல் இல்லாமல் முடிந்ததில்லை...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now