வெட்கம்

80 16 72
                                    


என் முகம் கண்டு நீ சிரிக்கையில்  மனசுக்குள் மின்வெட்டு போல்
உடனே தலை தாழ்த்துகிறேனே
இது தான் வெட்கமோ...

தொட்டால் சுருங்கும் இலை
போல நீ தொடாமலே உன் முகம்
கண்டு சிணுங்குகிறேன்
இதுகூட வெட்கம் தானோ..

என்னை உற்று நோக்குகையில்
உன் விழியின் ஆழம் தாங்காமல்
என் இமை இரண்டும்
சிறகு விரிக்கும் பறவையாய் 
படபடக்கிறதே இதுவும் வெட்கமோ

என்னை பார்த்து நீ கேட்கும் கேள்விக்கு
பதில் தெரிந்தும் வாய்மொழி மறந்து
தரை நோக்கி தன்னிலை மறக்கிறேனே
இது கூட வெட்கம் தானோ...

என் பிறை நெற்றியில் உன் முதல்
முத்தம் பதிக்கையில் நெஞ்சம்
துடிதுடித்து அதை மறைக்க உன் நெஞ்சத்திலே புதைக்கிறேனே 
இது கூட வெட்கம் தானோ

உன் ஒற்றை பார்வையில் ஓராயிரம்
முறை என்னை தொலைத்து உன் புன்னகையில் முகம் மூடி வெட்கம் கொள்வதேனடா...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now