1

1.3K 10 0
                                    


பாகம் 1

அந்த யாருமற்ற அனாதை சாலை...

மின்வெட்டு காரணத்தால் வெளிச்சம் இழந்து இருள் சூழ்ந்து ஒரு விதமான பயத்தை ஏற்படுத்த...

தூரத்தில் ஒற்றை விளக்கு வெளிச்சம் பரவி வர...

இருள் அந்த வெளிச்சத்திற்கு வழி கொடுத்தது...

அந்த வெளிச்சத்திற்கு சொந்தமான அவன் தன் bike ஐ வேகமாகவும் பதற்றத்துடன் ஓட்டி வந்தான்...

சாலையில் இருந்து ஒரு‌ தெருவிற்குள் நுழைய... ஒரு நிமிடம் பயணத்தில் ஒரு வீட்டின் முன் bike ஐ நிறுத்தி stand ஐ கூட சரியாக போடாமல் நிறுத்தி அவன் நகர... bike விழ... மின்சாரம் வந்து வெளிச்சத்தை கொடுக்க...

அதை திரும்பி பார்த்து விட்டு மாடி படி ஏறி கதவை நோக்கி ஓடினான் ஜெரோம்...

"உத்தமா... டேய் உத்தமா... கதவ திற டா... அடேய் உத்தமா... அச்சோ என்ன டா பண்ற..."என்று தன்னால் முடிந்த வரைக்கு கதவை பலமாக தட்டினான் ஜெரோம்...

"இது வேலைக்கு ஆகாது..."என்று நினைத்துக் கொண்டு தன் mobile ஐ எடுத்து உத்தமா என்று இருந்த number க்கு dial செய்து கதவில் தன் காதை வைத்து உன்னிப்பாக கவனிக்க...

"தலைகோதும்
இளங்காத்து சேதி
கொண்டு வரும்...
மரம் ஆகும் விதை
எல்லாம் வாழ சொல்லி
தரும்...

கலங்காத கலங்காத
நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத
நாளும் இங்கு இல்லை..."
என்ற பாடல் caller tune அவன் Mobile வழியே கேட்க...

உள்ளே இருந்து எந்த விதமான‌ சத்தமும் இல்லை...

ஜெரோம் :"ஒருவேளை வீட்டுல இல்லையா..."என்று யோசித்து கொண்டே திரும்பி சுற்றும் முற்றும் பார்க்க...

அவன் bike ம் செருப்பும் இருந்தது...

ஜெரோம் வழிந்த வெர்வையை வழித்து விட்டு "shhh mobile ஹ silent போட்டுட்டானோ... இப்ப என்ன பண்றது..."என்று பதற்றதுடன் யோசித்து விட்டு ஏதோ ஞாபகம் வர...

வேகமாக கீழே இறங்கி வந்தான்...

கீழ் இருந்த வீட்டின் கதவை தட்ட போய் ஏதோ யோசித்து விட்டு தன் Mobile ல் call செய்தான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now