எட்வின் தோசையை சாப்டு கொண்டே "நீ சொன்ன விசயத்த வச்சு... எனக்கு தோணுறத சொல்றேன்... சொல்லட்டா..."என்று கேட்க...
சாம்லி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்...
எட்வின் : என்ன அப்படி பாக்குற...
சாம்லி : ஒன்னும் இல்ல சொல்லுங்க....
எட்வின் :"சட்னி வை..."என்று தட்டில் இருந்த சட்னி தோசையில் வலிந்து வாயில் போட்டு கொள்ள...
சாம்லி சட்னியை வைத்து "இப்ப சொல்ல போறீயா இல்லையா..."என்று கேட்க...
எட்வின் :"சொல்றேன் ஏன் அவசரம்..."என்று தண்ணியை குடித்து விட்டு "லியா கிட்ட வசந்தா மன்னிப்பு கேட்டு இருக்கா... ஆனா லியா வசந்தா அப்பப்போ கடுகடு னு பேசுறத மனசுல வச்சுக்கிட்டு அதனால தான் மன்னிப்பு கேட்குறதா நினைச்சு பரவா இல்ல னு சொல்லி இருப்பா...அப்படி தானே..."என்று கேட்க...
சாம்லி : நா உங்க கிட்ட சொன்ன விசயத்தை நீங்க என் கிட்டையே சொல்றீங்களா...
எட்வின் : அடடா கேட்டதுக்கு பதில் சொல்லு மா...
சாம்லி : ஆமா...
எட்வின் : ம்ம்ம்... அது தான்... முக்கியம்... வசந்தா சம்பந்தமே இல்லாம மன்னிப்பு கேட்க வாய்ப்பே இல்ல...So...
சாம்லி : So...
எட்வின் : லியா சங்கடப்படுற மாதிரி வசந்தா ஏதோ பண்ணி இருக்காங்க... அது அவங்களுக்கு தப்பு னு தோணி இருக்கு... அதனால தான் மன்னிப்பு கேட்டு இருக்கனும்...
சாம்லி : சங்கப்படுற மாதிரியா...
எட்வின் : நல்லா யோசிச்சு பாரு... உத்தமா லியா வ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரும் போது நல்லா பாத்துக்கிட்டான்... ஆனா போக போக தான் இப்படி எல்லாம் பண்ணான்... வசந்தா பத்தியும் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல... ஆனா முன்னாடி எல்லாம் நா வீட்டுக்கு மூத்த மருமக எனக்கு மதிப்பு மரியாதை இல்ல னு எந்த நேரம் பாத்தாலும் சொல்லிட்டே இருக்குற ஆள்...
திடீர் னு பேசுறதே நிறுத்திட்டாங்க... என்ன நடந்தாலும் கண்டுக்கவே இல்ல... தான் உண்டு தன் வேலை உண்டு இருந்தாங்க...இப்ப அவங்களாவே வந்து பேசி மன்னிப்பு கேட்டு இருக்காங்கனா... அதுல இருந்தே தெரியலையே..
வசந்தா ஏதோ பண்ணி இருக்காங்க னு... So என்னோட guess இது தான்...வசந்தா லியா எதிரா ஏதோ பண்ணி இருக்காங்க... மனசு உறுத்தி இருக்கு... வந்து மன்னிப்பு கேட்டு இருக்கா... That's all.."என்று தட்டில் கை கழுவி விட்டு அவள் முந்தானையில் துடைத்து விட்டு நகர...

KAMU SEDANG MEMBACA
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Fiksi Umumஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???