பாரதி லியா சாம்லி மூவரும் பேசி கொண்டு இருந்தனர்...
லியா : அக்கா எப்போ வருவீங்க... Bore அடிக்கிது கா... சீக்கிரம் வாங்க...
பாரதி : நா வர இன்னும் மூனு மாசம் ஆகும்...
லியா : என்ன கா இப்படி சொல்றீங்க...
பாரதி அவள் வயிற்றில் கை வைத்து "உனக்கும் ஒரு நாள் வரும்... அப்போ தெரியும்..."என்று சொல்ல...
சாம்லி அமைதியாகவே இருந்தாள்...
பாரதி : ஏ... உனக்கு என்ன ஆச்சு... நீ வந்ததுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன்... அமைதியா இருக்க...
சாம்லி : ஒன்னும் இல்ல... நல்லா தான் இருக்கேன்...
பாரதி : அப்படியா...
சாம்லி : சரி என்னைய கேள்வி கேட்குறீயே... லியா வ கேட்டியா...
பாரதி : ஏன் லியாவுக்கு என்ன...
சாம்லி நடந்த விசயத்தை சொல்ல...
பாரதி ஆச்சரியத்துடன் பார்த்து "உண்மையா லியா...வசந்தா அக்கா வா இப்படி பண்ணாங்க... என்னால நம்ப முடியல..."என்று கேட்க...
Nurse உள்ளே வந்து medicine வாங்கி வர சொல்ல...
லியா வாங்கி வருவதாக செல்ல...
சாம்லி பாரதியிடம் எட்வின் சொன்னதை சொன்னாள்...
சாம்லி : எனக்கும் எட்வின் சொன்னது சரி னு தான் தோணுது...
பாரதி : கண்டிப்பா ஏதாவது வசந்தா அக்கா சொல்லி இருப்பாங்க...
சாம்லி : எப்படி உறுதியா சொல்ற...
பாரதி : நா கல்யாணம் ஆகி வந்த புதுசு ல எல்லாருக்கு என்னைய பிடிச்சு இருந்துச்சு... எல்லாரும் என்னைய பத்தியே பேசுனாங்க... வசந்தா அக்காவுக்கு அது பிடிக்கல... அவங்க பண்றது பேசுறது வச்சே நா தெரிஞ்சுக்கிட்டே... திவாகர் என் கிட்ட எப்பவும் சித்தி சித்தி னு என் கூடவே ஒட்டிக்குவான்...
ஒரு நாள் திடீர் னு என் கூட பேசுறதும் நிறுத்திட்டான்... என் கூடவும் இருக்குறதும் இல்ல... நா திவாகரை கூப்டே கேட்டுட்டேன்... அதுக்கு அவன் அம்மா தான் உங்க கிட்ட பேச கூடாது னு சொல்லிட்டாங்க னு சொன்னான்... ஏன் கேட்டா உங்களுக்கு குழந்தை இல்லையாம்... நா உங்க கிட்ட பேசுனா எனக்கு ஏதாவது ஆகிடுமாம் அதனால் பேச கூடாது னு சொல்லிட்டாங்க னு சொன்னான்...

أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???