83

78 3 0
                                        

இதோ...

அன்று நடந்த சண்டை முடிந்து இன்றோடு ஆறு‌ மாதம்...

இந்த ஆறு மாசம் கால இடையில் எவ்வளவோ சண்டைகள் வந்தது...

அன்று நடந்த பிரச்சனையில் உத்தமாவிடம் கேட்ட கேள்வியில் அவன் தந்த பதிலை கேட்டு அனைவரையும் கோவமாகியது...

கோபமடைந்த ஹெரால்டு உத்தமா வை அடித்து விட... பிரச்சனை பெரிதாகியது...

ஜன்னல் வழியாக பார்த்த ஜோனா லியாவிடம் சொல்ல...

லியா எதுவும் பேசாம அமைதியாக இருந்தாள்...

வெளிய சத்தம் அதிகமாக... வேற வழி இன்றி குழந்தையை ஜோனா விடம் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்...

லியா : "நிறுத்துங்க..."என்று கத்த...

அனைவரும் அவளை‌ பார்த்தனர்...

உத்தமா வேகமாக லியா அருகில் வந்து "லியா... லியா இங்க பாரு..."என்று தன் அடிப்பட்ட மூக்கை காட்டி "உன் அண்ணா பண்ண வேலைய பாரு...நீ வா லியா நம்ம வீட்டுக்கு போகலாம்...இவங்க யாருமே வேணாம்... வா போலாம்... எங்க நம்ம குழந்தை தூக்கிட்டு வா போலாம்..."என்று அவள் கையை பிடித்து உள் அறையை எட்டி பார்க்க...

லியா அவனிடம் இருந்து கையை உறுவினாள்...

உத்தமா அவளை பார்க்க...

லியா ஹெரால்டு ஐ பார்த்து "என்ன ஆச்சு அண்ணா..."என்று கேட்க...

ஹெரால்டு பல்லை கடிக்க...

ஜெரோம் : நா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் மா லியா... இவன் உன்னையே கல்யாணம் பண்றேன் னு சொல்லும் போதே நா தடுத்து இருக்கனும்... நல்லா மாதத்துக்குவான் நம்பி பேசாம அமைதியா இருந்தது என் தப்பு...அவன் உன்னையே நல்லா பாத்துக்குறேன் சொல்றது எல்லாம் பொய்... அவனுக்கு உன் மேல சந்தேகம்... 

ஹெரால்டு அவனை‌ முறைத்து கொண்டு "அந்த நாதாரி உன் மேல சந்தேகம் இருக்கு னு‌ சொன்னதை கூட ஒரு விதத்துல மன்னிச்சுடுவேன்... ஆனா அவன் உன்னைய அந்த சுந்தர் கூட சேர்த்து வச்சு பேசுவதும் இல்லாம யார் கூட பேசுனாலும் அவளை நா சந்தேகப்படுவேன்... எனக்கு அவ யார் கூடவும் பேச கூடாது... என் கிட்ட மட்டும் தான் பேசனும்...என் அண்ணா அண்ணி ஜெரோம் சாம்லி எட்வின் இவங்க கூட மட்டும் தான் அவ பேசனும்... உங்க குடும்பத்து ஆளுங்க கூட பேசுனாலும் நா சந்தேகப்படுவேன் னு சொன்னா என் பாரு... அத மட்டும் என்னால‌ மன்னிக்க முடியாது..."என்று ஆக்ரோஷமாக கத்தினான்...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن