நல்லசெல்வன் கோவத்துடன் வசந்தாவை இழுத்து செல்ல...
பாரதி : நல்லா மாமா...
நல்லா காதில் வாங்காமல் அவளை இழுத்து சென்று விட்டான்...
தன் வீட்டிற்கு இழுத்து வந்து உள்ளே தள்ளி விட்டு ஓங்கி அறைந்தாள்...
வசந்தா கன்னத்தில் கை வைத்து அவனை பார்த்தாள்...
நல்லா : "ச்சீ..."என்று முகத்தை திரும்பி கொள்ள...
வசந்தா : இப்ப சந்தோஷம் தானே...
நல்லா : பேசாத டி... நீ பொண்ணு தானே... இப்படி தான் பாரதியையும் பேசுன... ஆனா நீ பேசுனது யாருக்கும் தெரியாது... இப்போ நீ பேசனத அப்பா பார்த்து கோவப்பட்டு என் கிட்ட வந்து சொன்னாரு... பாரதி ய சொன்னது மட்டும் அவருக்கு தெரிஞ்சா அவரோட கோவத்தை தாங்க மாட்ட...
வசந்தா : என் கோவம் என் மேல கோவத்தை காட்ட அவரு யாரு...
நல்லா : நீ பண்ற வேலைக்கு அவரு மட்டும் இல்ல யாரா இருந்தாலும் கோவப்படுவாங்க... அவரு ஏதோ நம்ம மருமக னு அமைதியா பொறுமையா போறாரு....
வசந்தா : முத கேட்டதுக்கு பதில் சொல்லுங்க... என் மேல கோவப்பட அவரு யாரு... நீங்க என் புருஷன் கோவப்படுறீங்க திட்டுறீங்க அடிக்கீங்க... உங்களுக்கு உரிமை இருக்கு... அவரு யாரு... அவரா எனக்கு தாலி கட்டி இருக்காரு...
நல்லா வேகமா நிமிர்ந்து பார்த்து கடும் கோவத்துடன் கையை ஓங்கி அவளை நெருங்க...
பாரதி வேகமாக வந்து அவனை பிடித்து இழுத்தாள்...
பாரதி : என்ன மாமா பண்றீங்க...
நல்லா : என்னைய விடு மா... இவளை அடிச்சு கொன்னு போட்டா கூட தப்பு இல்ல...
பாரதி : என்ன பேசுறீங்க மாமா...
நல்லா : நீ எதுவும் பேசாத மா...
பாரதி : கோவப்படாதீங்க மாமா... விடுங்க...
நல்லா : உனக்கு தெரியாது மா... அவ என்ன சொன்னா னு தெரியுமா...
பாரதி : என்ன வேணும்னாலும் சொல்லட்டும்... அதுக்கு அடிக்க போவீங்களா... தப்பு மாமா... உங்க கிட்ட நா இத எதிர்ப்பார்க்கல மாமா...
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???