வலியுடன் நான் (நீ)
பாகம் 8
மதிய வேலையில்
லியா தூங்கி கொண்டு இருக்க...
உத்தமா லியாவுக்கு தெரியாமல் சாம்லியை பார்க்க வந்தான்...
உத்தமா : சாம்லி அக்கா...
சாம்லி : வா டா... என்ன வெளியவே நிக்கிற...
உத்தமா : "ஒரு help அது தான்..."என்று இழுக்க...
சாம்லி : என்ன டா சொல்லு...
உத்தமா : அது வந்து கா... நேத்து police station போகும் போது அவளோட bag மும் சேர்த்தே கொண்டு போயிட்டோம்...நகையை கொடுக்கும் போது அதுவும் கொடுத்துட்டா... அவ மாத்திக்க dress இல்ல... அது தான்...
சாம்லி : அவ்ளோ தானே... நா தரேன் டா... என்னமோ தயங்கி தயங்கி கேக்குற...
உத்தமா : அது இல்ல கா... இப்ப மாத்திக்க கூட நீங்க கொடுங்க... நீங்க இப்ப வந்தா அவளுக்கு கொஞ்சம் dress எடுத்துட்டு வரலாம்...
சாம்லி : அதுக்கு எதுக்கு டா நா... நீ அவளையே கூட்டிட்டு போய் அவளுக்கு பிடிச்சது எடுத்து கொடு...
உத்தமா : அவ தூங்குறா கா... ரெண்டு நாளா அவளுக்கு சரியா தூக்கம் இல்ல... Disturb பண்ண வேணாம் னு தான் உங்களை கூட்டிட்டு போலாம் னு வந்தேன்...
சாம்லி : "டேய் கிறுக்கு பயலே... ஆமா ஒன்னு கேட்கலாம் னு நினைச்சேன்... நீங்க ரெண்டு பேரும் நேத்து..."என்று இழுக்க...
உத்தமா : "இல்ல..."என்று சோகத்துடன் சொல்ல...
சாம்லி சிரித்து கொண்டே"ரொம்ப feel பண்ற போல..."என்று கேட்க...
உத்தமா : நேத்து காலைல கல்யாணம் ஆச்சு... இங்க வந்த உடனே police station க்கு தூக்கிட்டு போயிட்டாங்க... அந்தா இந்தா அழைஞ்சு திரிஞ்சு வீட்டுக்கு வந்தா பாரதி அண்ணியும் லியாவும் உட்காந்து பேசிட்டு இருந்தாங்க...
நானும் அவ வருவா வருவா னு wait பண்ணி பாத்துட்டு தூங்கிட்டேன். காலைல எழுந்து பாத்தா பாரதி அண்ணி கூட hall ல படுத்து இருந்தா... அப்புறம் நடந்த சம்பவம் தான் உங்களுக்கே தெரியுமே...
ESTÁS LEYENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Ficción Generalஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
