உத்தமா தன் அறையில் கதவை சாத்தி கொண்டு தரையில் அமர்ந்திருந்தான்...
அறை முழுவதும் இருள் பரவி இருந்தது...
உத்தமாவின் மனதில் முழுவதும் காலையில் பாரதி பேசிய வார்த்தை மட்டுமே நிரம்பி இருந்தது,..
காலை...
உத்தமா : "நீங்க என்ன சொன்னாலும் சரி... எனக்கு தெரியாம அவளை அனுப்புவது தப்பு தான்..."என்று கோவ அலைகளால் பாய...
பாரதி : "ஆமா சாமி நாங்க தப்பு தான் பண்ணோம்... இந்த காரியத்தை நாங்க முன்னாடியே பண்ணி இருக்கனும்... இப்ப பண்ணோம் ல அதா தப்பு தான்..."என்று நிதானமாக சொன்னாள்...
உத்தமா : "என்ன முன்னாடியே பண்ணி இருக்கனும்..."என்று கத்த...
சாம்லி : சும்மா கத்தாத டா... நீ கத்தி பேசுறதால நீ செய்தும் பேசுறதும் சரி ஆகாது... நாங்க அமைதியாக இருக்குறதால நீ பண்றது எல்லாத்துக்கு சரிங்குற மாதிரி இல்ல... வீணா சண்டை எதுக்கு னு அமைதியா போறது...
உத்தமா : நேத்து ராத்திரி அப்படி நா என்ன பண்ணேன் இப்படி பேசுறீங்க...
பாரதி : ஏன் உனக்கு எதுவுமே ஞாபகம் இல்லையா...
உத்தமா : என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு இருந்தேன்...
சாம்லி : பேசிட்டு மட்டுமா இருந்தா...
உத்தமா : "ஆமா..."என்று தைரியமாக சொல்ல...
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள...
சாம்லி : எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அவனை கொல்ல பண்ண போறேன்...
பாரதி : செய்றதும் செஞ்சுட்டு எதுவுமா நடக்காத மாதிரி நீ பேசுறது கொஞ்ச கூட சரி இல்ல டா உத்தமா...
உத்தமா : நீங்க என்ன சொல்றீங்க னு எனக்கு புரியல...அப்படி நா என்ன பண்ணேன்...
சாம்லி : டேய்... டேய் நடிக்காத டா... நு என்ன பண்ண னு உனக்கு தெரியாது...
உத்தமா : சத்தியமா எனக்கு தெரியல...
சாம்லி : அது சரி... நீ தான் போதை ல இருந்தீயே... எப்படி ஞாபகம் இருக்கும்...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???