அன்று லியா அறைந்தது இப்போது அறைந்தது போல் இருந்தது...
கோவத்துடன் போதையுடன் வீட்டிற்கு சென்றான்...
அவன் வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்திய போது மணி 11...
தள்ளாடியவாறு தன் அறைக்குள் நுழைந்தான்...
லியாவும் ஜோயலும் கட்டிலில் தூங்கி கொண்டு இருந்தனர்...
அறையில் அந்த சிறு வெளிச்சத்தில் சேவை விலகி லியா இடை தெரிய...
அவள் அருகில் போய் படுத்தான்...
உத்தமா மெதுவாக அவள் மேல் கை வைத்து தடவ...
தன் மேல் ஏதோ ஊருவது போல் இருக்க...
வேகமாக எழுந்து அமர்ந்தாள்...உத்தமா திரும்பி படுத்து கொள்ள...
லியா அவன் முதுகையே வெறித்து பார்த்து விட்டு சற்று தள்ளி படுத்து கொண்டாள்...
சிறிது நேரம் கழித்து மறுபடியும் உத்தமா லியா அருகே நெருங்கி அவள் இடையில் கை வைக்க...
லியா அவன் கையை தட்டி விட்டு எழுந்து அமர்ந்து அவனை முறைத்தாள்...
உத்தமா எச்சிலை விழுங்கி கொண்டு "லியா மா... நா வந்து சும்மா பக்கத்துல படுத்தேன்... அவ்ளோ தான்...வேற ஒன்னும் இல்ல மா..."என்று சொல்ல
லியா : "ச்சீ..."என்று முகத்தை சுழித்தவாறு
ஜோயலை தூக்கி கொண்டு கட்டிலை விட்டு கீழே இறங்கி படுத்து கொண்டாள்...உத்தமாவும் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு கெஞ்சி கொண்டே இருக்க...
லியா காதிலேயே வாங்காமல் பேசாமல் படுத்து இருக்க...
உத்தமா கோவமாகி அவளை அவளை பிடித்து இருந்தான்...
லியா அவனை தள்ளி விட்டு "மரியாதையா போயிடு... நீ பேசுன பேச்சுக்கு உன் கூட இந்த வீட்டுல இருக்குறதே பெரிசு... ஒழுங்கா நீ உன் வேலைய பாத்துட்டு இரு... நா உனக்கு ஆக்கி போடுறேன்... என் புள்ளைய பாத்துக்குறேன்... வேலைக்கு போனோமா வந்தோமா சாப்டோமா இரு... புருஷன் னு என் கிட்ட எல்லை மீறனும் உரிமை எடுத்துகனும் னு நினைச்சா அவ்ளோ தான்... நா மனுஷி இருக்க மாட்டேன்..."என்று கத்த...

VOCÊ ESTÁ LENDO
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Ficção Geralஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???