40

111 4 0
                                        

சாம்லி சொன்னதை கேட்டு உத்தமா கடுப்பாகி "சும்மா என்னைய சொல்லாதீங்க... அவ நல்லா இருக்கனும் னு தானே எல்லாத்தையும் செய்றேன்..."என்று சொல்ல...

சாம்லி அவனை முறைத்தாள்...

உத்தமா : என்ன முறைக்கிற...

சாம்லி : நீ எல்லாம் திருந்தவே மாட்ட டா... பாவி பாவி‌... இது தான் நீ நல்லா பாத்துக்குறதா... உன் மனசாட்சிய தொட்டு சொல்லு நீ உண்மையா அவளை நல்லா பாத்துக்கிட்டீயா...

உத்தமா : தேவை இல்லாம பேசாத கா...

சாம்லி அவனிடம் சொல்ல வந்து ஏதோ யோசித்து உள்ளே சென்றாள்...

லியா அமர்ந்து இருக்க... ஹெரால்டு பாரதி ஆசீர்வாதம் மலர்மணி அங்கே அமர்ந்திருந்தனர்...

சாம்லி பாரதி அருகில் சென்று அவள் காதில் ஏதோ சொல்ல...

பாரதி சாம்லி நிமிர்ந்து பார்க்க...

சாம்லி கண் காட்ட...

பாரதி ஆசீர்வாதத்தை பார்த்து "அப்பா கொஞ்சம் வெளிய இருக்கீங்களா..."என்று சொல்ல

ஆசீர்வாதம் : என்ன ஆச்சு மா... பிரச்சனை இல்லயே...

பாரதி : அது எல்லாம் இல்ல பா... கோச்சுக்காம கொஞ்சம் நேரம் பா... வெளிய இருக்கீங்களா...

ஆசீர்வாதம் :"சரி மா..."என்று எழுந்து செல்ல...

பாரதி திரும்ப பின்னால் ஹெரால்டு அவளையே உற்று பார்த்தான்...

பாரதி :"Brother... நீங்களும் கொஞ்சோம்..."என்று வெளியே நோக்கி கையை நீட்ட...

ஹெரால்டு தோளை உலுக்கி கொண்டு வெளியே சென்றான்...

மலர்மணி புரியாமல் விழிக்க...

பாரதி :"அம்மா கொஞ்ச நேரம் இருங்க..."என்று லியா அருகில் சென்று "வா டி ஒரு நிமிசம்..."என்று அவளை இழுத்து அந்த அறையில் ஓரத்தில் கூட்டி சென்று அவளிடம் ஏதோ கேட்க...

லியா திருதிருவென முழிக்க..

பாரதி : என்ன டி இப்படி முழிக்கிற...

லியா மறுபடியும் அப்படியே முழிக்க...

சாம்லி : "இது சரி வராது...
இரு வரேன்..."என்று வெளியே செல்ல...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant