உத்தமா தன் mobile ஐ நோண்டி கொண்டு இருந்தான்...
ஜெரோம் நகத்தை கடித்து கொண்டு அவனை பார்த்து " கேட்கலாமா வேணாமா... கோவப்படுவானோ... " என்று தனக்கு தானே புலம்பி கொண்டே யோசித்தான்...
உத்தமா : டேய்..
ஜெரோம் பயந்து போய் "ஹான்..."என்று நிமிர்ந்து அவனை பார்க்க...
உத்தமா : என்ன டா கூட்டிட்டு வந்துட்டு நீ தனியா உட்காந்து இருக்க...
ஜெரோம் : "அது அது வந்து நா நா வந்து உன் கிட்ட நா பேசி..."என்று வார்த்தை தந்தி அடிக்க...
உத்தமா புருவத்தை சுருக்கி கொண்டு அவனை பார்த்து "என்ன டா ஆச்சு..."
ஜெரோம் விழித்தவாறு அவனை பார்த்து பெருமூச்சு விட்டு "கேட்க வேண்டியது தான்... அமைதியா இருந்தா ஆகாது..."என்று நினைத்து கொண்டு ஒரு முடிவுடன் அவனை பார்த்தான்...
உத்தமா : நீ நல்லா தானே இருக்க...
ஜெரோம் : நா நல்லா இருக்கேன்... உன் கிட்ட ஒன்னு கேட்கனும்...
உத்தமா : ம்ம்ம் கேளு...
ஜெரோம் : நீ... நீ வேலேக்கு போறீயா..
உத்தமா விழி விரிய " நீ என்ன கேட்குற..."என்று அவனை பார்க்காமல் திரும்பி கொள்ள...
அவன் நடவடிக்கையை கவனித்து சிறு தைரியம் தொற்றி கொள்ள "டேய் என்னை பாரு..."என்று குரலை உயர்த்தி சொல்ல...
உத்தமா : என்ன லூசு தனமான கேள்வி... நா வேலைக்கு தான் போறேன்...
ஜெரோம் தலையை ஆட்டி கொண்டே " இல்ல... நீ இந்த வாரம் ரெண்டு நாளா வேலைக்கு போகல... இங்க தான் இருந்த... அதுவும் வீட்டுல இல்ல... வெளிய... உன் வீட்டு பக்கத்துல இருக்குற காட்டுல... அங்கே உட்காந்து இருந்திருக்க... Correct ஹ..."என்று அவனை பார்க்க...
உத்தமா எச்சிலை விழுங்கி கொண்டு தலை குனிந்தான்...
ஜெரோம் : "கேட்குறேன் ல சொல்லு டா..."என்று கோவமாக கத்த...
உத்தமா : அப்படி இல்லையா... நா வேலைக்கு போனேன்...
ஜெரோம் : "அப்படியா... சரி டா...இரு..."என்று தன் mobile ஐ எடுத்து யாருக்கோ dial செய்தான்...
![](https://img.wattpad.com/cover/313805036-288-k677087.jpg)
YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???