24

78 3 0
                                    

உத்தமா கன்னத்தில் கை வைத்தவாறு தலை குனிந்து நின்றான்...

பாரதி லியா கையை பிடித்து கொண்டாள்...

லியா : அக்கா வேணாம் கா... இந்த ஒரு தடவ மன்னிச்சுடுங்க...

பாரதி : லியா நீ பேசாம இரு... இது தான் முத தடவையா இருந்தா சரி னு மன்னிச்சு விடுலாம்... ஒரு ரெண்டு வாரமா இவன் இதே வேலையா தானே இருந்திருக்கான்...

லியா : சரி இருக்கட்டும்... இந்த ஒரு தடவ தானே மன்னிக்க சொல்றேன்... விடுங்களேன்...

பாரதி : கண்டிச்சா தான்... மறுபடியும் இது மாதிரி செய்ய மாட்டான்...

முத்துராமன் உத்தமா வை அடிக்க கையை ஓங்க...

லியா பாரதி பிடியில் இருந்து விலகி உத்தமா முன் நிற்க...

முத்துராமன் ஓங்கிய கையை இறங்கினார்...

பாரதி : லியா என்ன பண்ற... தெரியாம உன் மேல அடி பட்டு இருந்தா என்ன பண்றது...

லியா : பட்டா என்ன கா... என் மாமா தானே... எனக்கு அப்பா மாதிரி தானே...

முத்துராமன் லியா வை பார்த்தார்...

பாரதி : சரி இருக்கட்டும்... அதுக்கு நீ எதாவது தான் தப்பு பண்ணி இருந்தா உன்னைய அடிக்கவோ கண்டிக்கவோ நீ சொன்ன மாதிரி உரிமை இருக்கு... அதே மாதிரி தான் இதுவும்... நீ தப்பு பண்ணா கண்டிக்கிற மாதிரி தான் இவன் தப்பு பண்ணதுக்கு கண்டிக்கிறாரு...நீ பேசாம இந்த பக்கம் வா...

லியா : நீங்க சொல்றது சரி தான்... கண்டிச்ச வரைக்கும் போதுமே... இவர் என்ன வேணும் னா பண்ணாரு...விட்டுங்க...

அறிவு : இல்ல மா லியா... நாலு போடு போட்டா தான்... மறுபடியும் இது மாதிரி பண்ண கூடாது னு நினைப்பு வரும்... அந்த பக்கமே போக மாட்டான்...

நல்லா : அறிவு சொலாறது சரி...

முத்துராமன் : "எல்லாரும் அமைதியா இருக்கீங்களா..."என்று கத்தி விட்டு அங்கே அமர்ந்து கண்ணை மூடினார்...

சிறிது நேரம் கழித்து கண் விழித்து பெருமூச்சு விட்டு உத்தமா வை பார்த்து "அந்த பொண்ணு சொல்லுதே னு இதோட உன்ன விடுறேன்... மறுபடியும் நீ இது மாதிரி பண்ண னு தெரிஞ்சுது... படவா கொன்றுவேன்... ஞாபகம் வச்சுக்கோ...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now