சுந்தர் சிலையாக நிற்க...
ஜெரோம் அவனை மேலும் கீழும் பார்த்து அவன் தோளை உலுக்க...
சுந்தர் :"அய்யய்யோ..." என்று பதற
ஜெரோம் : டேய் ஏன் டா...
சுந்தர் : போச்சா... போச்சு... நல்லா கோத்து விட்டுட்ட... செத்தேன் நா....
ஜெரோம் : ஏ... ச்சீ... வாய மூடு... புலம்புற...
சுந்தர் : என்ன நடக்கும் னு எனக்கு தான் தெரியும்...
ஜெரோம் : அப்படி என்னத்த பண்ணிட போறான்...
சுந்தர் : அவன் சரக்கு அடிச்சு இருக்கும் போது கூட இருந்திருக்கீயா...
ஜெரோம் : இல்ல...
சுந்தர் : ஹா... நா இருந்திருக்கேன்...
ஜெரோம் : அதனால என்ன டா...
சுந்தர் : அதனால என்ன வா... போயா யோவ்... சரக்கு அடிச்சா என்ன பேசுவான்... எப்படி எல்லாம் பேசுவான் னு எனக்கு தெரியும் யா...
ஜெரோம் : என்ன உலர்ற...
சுந்தர் : என்னது உலர்றேனா... சரி தான்... யோவ் பேசுவான் யா...
ஜெரோம் : என்ன பேசுவான்...
சுந்தர் : அது தான் தெரியாதே... பேசுவான்...பேசுவான்... பேசுவான்... பேசிக்கிட்டே இருப்பான்... ஆனா...
ஜெரோம் : என்ன ஆனா... இப்ப எதுக்கு நிறுத்துன...
சுந்தர் : ம்ம்ம்... பேசுவான்... பேசுவான்... பேசுவான்... பேசிக்கிட்டே இருப்பான்...
ஜெரோம் : ஒழுங்கா சொல்லு டா...
சுந்தர் : பேசுவான்... பேசுவான்...
ஜெரோம் : அடேய்... என் பொறுமையே சோதிக்காத... அடிச்சு பண்டைய திறந்து விட்டுடுவேன்... விசயத்துக்கு வா டா...
சுந்தர் : இதே தான் யா...
ஜெரோம் : எது...
சுந்தர் : உனக்கு புரியற மாதிரி சொல்லனும் ல... அதுக்கு தான்...
ஜெரோம் : எப்பா சாமி நீ ஒரே ஒரு வார்த்தை தான் டா சொன்னா... ஆனா அத எதுக்கு சொன்ன னு தெரியல... இதுல எப்படி டா எனக்கு புரியும்...

YOU ARE READING
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
General Fictionஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???