சாம்லி தன் அம்மா அப்பாவுடன் கிளம்பி செல்ல...
அரைமணி நேரத்தில் எட்வினும் கிளம்பி சாம்லிய கூட்டிட்டு வரேன் என்று கூட ஜெரோமையும் உத்தமாவையும் அழைத்து சென்றான்...
ஜெரோம் : "யோவ் மாமா ஒரு half an hour உன்னால பொறுக்க முடியலையா... ஏன் யா மானத்தை வாங்குற..."என்று சலிப்பாக தலையில் அடித்து கொள்ள...
எட்வின் : நீ ஏன் டா சலிச்சுக்குற... இப்ப இப்படி பேசுற ல... உனக்கா கல்யாணம் ஆகிருச்சு... உன் பொண்டாட்டி இதே மாதிரி போகுது நீ என்ன பண்ற னு பாக்குறேன்...
ஜெரோம் : நா எல்லாம் இப்படி இருக்க மாட்டேன்... அவ அம்மா வீட்டுக்கு தானே போறா... போய் சந்தோஷமா இருந்துட்டு வா... Because மறுபடியும் நீ இங்க வந்து தான் ஆகனும்... அது வரைக்கும் ஜாலி யா இரு னு சொல்லியே அனுப்பி வைப்பேன்...
எட்வின் : நானும் பாக்க தானே டா போறேன்...
ஜெரோம் : என்னைய விடு... இந்த உத்தமா எப்போ பாத்தாலும் அவன் பொண்டாட்டி கூடவே தானே இருக்கான்... எங்க போனாலும் அவளையே தானே பாக்குறான்... இன்னும் நாலு மாசத்துல அவனுக்கும் வளைகாப்பு போடுவாங்க... அப்போ இவன் என்ன பண்ணுவான் னு கேளு...
எட்வின் : இதுல யோசிக்கவே தேவை இல்ல... இவனும் கூடவே போய் அங்க இருந்துக்குவான்....
உத்தமா இருவரையும் முறைத்து "என்ன என்னைய நக்கல் மாதிரி இருக்கு"என்று கேட்க...
ஜெரோம் : "அய்ய,.. என்ன டா இப்படி சொல்லிட்ட... நக்கல் பண்ற மாதிரி இல்ல... நக்கலே தான் பண்றோம்..."என்று சொல்லி சிரித்து எட்வினும் ஜெரோமும் hi-fi அடித்து கொள்ள...
உத்தமா : ரொம்ப பேசாதீங்க... சாம்லி வீடு வந்துருச்சு...
மூவரும் சாம்லியை அழைத்து கொண்டு கிளம்ப...
சாம்லி அம்மா அவர்களை தடுத்து " நாலு பேரா கிளம்ப கூடாது... ஒத்தப்படை தான் போகனும் னு..."என்று சொல்ல...
சாம்லி : அம்மா என்ன நீ... சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாம் பாக்குற... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல...
أنت تقرأ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
قصص عامةஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???
