69

60 3 0
                                    

லியா பேச பேச பாரதியும் சாம்லியும் அவளையே பார்த்தனர்...

லியா : நா என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்... ரொம்ப ஆர்வமா‌ கேட்குற மாதிரி பாக்குறீங்க..,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்...

லியா : இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க

சாம்லி : Nothing...

லியா : What nothing...

பாரதி அவள் அருகில் வந்து கையை பிடித்து "உனக்கு என்ன உத்தமா உன்
மேல கோவப்படுவானோ னு தானே பயம்... நாங்க இருக்கோம் ல எதுக்கு பயப்படுற... நீ போயிட்டு வா..."என்று சொல்ல....

லியா சோகமாக இருக்க...

சாம்லி : என்ன டி ஆச்சு... உன்னால உத்தமா வ விட்டு போக முடியலையா...

லியா "ஆமா..."என்பது போல் தலையை ஆட்டினாள்...

பாரதி : உத்தமா வ உனக்கு அவ்ளோ பிடிக்குமா...

லியா : "என்ன அக்கா இப்படி கேட்டுட்டீங்க... அவன் எப்படியோ எனக்கு தெரியல... ஆனா நா அவனை உண்மையா தான் love பண்ணேன்... அவனை விட்டு இருக்க முடியாது னு தானே என் அண்ணே என்னைய திட்டுனான் னு‌ சொல்லி வந்தேன்... இப்ப கூட உத்தமா எனக்கு எவ்வளவோ கஷ்டத்தை கொடுக்குறான்...

           இருந்தாலும் அவனை விட்டு இருக்க முடியல... அவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் வர்றதுக்கு late ஆச்சுன்னா இன்னும் இவனை காணோம் னு மனசு அடிச்சுக்கும்... நேத்து ராத்திரி தான் அவன் என் கூட சண்டை போட்டான்... அவன் பண்ணத பார்த்து எனக்கு கோவம் வந்துச்சு... ஆனா இப்ப இவனை விட்டு போகனுமா று தோணுது...அங்க பாருங்களேன்..."என்று அவனை காட்ட...

இருவரும் அவனை பார்த்தனர்...

லியா கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து "சின்ன குழந்தை மாதிரி இருக்கான்... எப்படி தூங்குறான் னு‌ பாருங்க... அவனாலையும் என்னைய‌ விட்டுட்டு இருக்க முடியாது... வேலைக்கு போனா கூட எனக்கு call  பண்ணி பேசிக்கிட்டே இருப்பான்... என் மேல அவ்ளோ பாசம்...

" அது பாசம் இல்ல... சந்தேகம்..."

லியா குரல் வந்த திசையில் பார்க்க...

வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)Where stories live. Discover now