வலியுடன் நான் (நீ)
மறுநாள் விடியலில்..,
சாம்லி வாசலில் தண்ணி தெளித்து பெருக்கி கொண்டு இருக்க...
பாரதி தூக்கம் கலையாத நிலையில் கண்ணை தேய்த்து கொண்டே சாம்லி வீட்டு வாசலில் அமர...
சாம்லி அவளை உற்று பார்த்து விட்டு "என்ன பாரதி... ராத்திரி தூக்கம் போச்சா..."என்று கண் அடித்து விட்டு கேட்க...
பாரதி அவளை நிமிர்ந்து பார்த்து "அடி போடி நீ வேற..."என்று சலித்தவாறு கன்னத்தில் கை வைத்து கொள்ள...
சாம்லி : அப்புறம் சலிச்சுக்கலாம்... இப்போ போய் பால் வாங்கிட்டு வா... மணி ஆச்சு... அப்புறம் பால்காரர் போயிட போறாரு...
பாரதி :"ம்ம்ம்...போறேன்"என்று சாம்லி எடுத்து வைத்த பாத்திரத்தையும் எடுத்து கொண்டு மெதுவா நடந்து செல்ல...
சாம்லி அவள் போவதையே பார்த்து விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்...
ஐந்து நிமிடத்தில் பாரதி பாலுடன் வந்தாள்...
சாம்லி : night அழுதியா...
பாரதி : ஆமா...
சாம்லி : ஏன்...
பாரதி அமைதியாக இருக்க...
சாம்லி : குழந்தைய பத்தி யாராவது எதுவும் சொன்னங்களா...
பாரதி தலையை ஆட்ட...
சாம்லி சற்று கோவமாகி "உன் கிட்ட நா எத்தனை தடவ சொல்லி இருக்கேன்... யாராவது இந்த விசயத்தை பத்தி பேசுனா என் கிட்ட சொல்லு... அவங்க கிட்ட நா எப்படி பேசனுமோ பேசிக்கிறேன் னு... அவங்க பேசும் போது கேட்டு எதுவும் பேசாம இங்க வந்து ஒப்பாரி வைக்கிறது... உனக்கு இதே வேலையா போச்சு... அறிவு என்ன சொன்னாரு... முத யாரு கேட்டா னு சொல்லு... நா பாத்துக்கிறேன்...இதே வேலையா போச்சு உனக்கு..."என்று கொந்தளிக்க...
பாரதி : அட நீ வேற ஏன் டி... அவங்களுக்கு இத விட்டா வேற பொழப்பு இல்ல... சண்டை போட்டு என்ன ஆக போகுது...
சாம்லி : இந்த வேலைய யாரு பாத்து இருப்பா னு எனக்கு தெரியும்... அந்த குட்டச்சி தானே...
VOUS LISEZ
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது)
Fiction généraleஅவனுக்காக அனைத்தையும் விட்டு வந்தாள்... ஆனால் அவனோ...???